முகப்பு /செய்தி /திருநெல்வேலி / பஸ் ஸ்டாப்பில் பள்ளி மாணவிகள் முடியைப் பிடித்துக்கொண்டு சண்டை - பாளையங்கோட்டையில் பரபரப்பு

பஸ் ஸ்டாப்பில் பள்ளி மாணவிகள் முடியைப் பிடித்துக்கொண்டு சண்டை - பாளையங்கோட்டையில் பரபரப்பு

பள்ளி மாணவிகள்

பள்ளி மாணவிகள்

Palayamkottai : திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் ஆசிரியர் முன்பாகவே பள்ளி மாணவிகள் சண்டையிட்டுக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.

  • Last Updated :
  • Tirunelveli, India

தென் தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் ஏராளமான கல்வி நிலையங்கள் அமைந்திருக்கின்றன. நகர் பகுதிகள் மட்டுமல்லாது திருநெல்வேலி மாநகரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவிகள் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வந்து தங்களது கல்வி நிலையங்களுக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் நேற்று பள்ளி முடிந்து மாணவிகள் வீடுகளுக்கு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது. மாணவிகளிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆசிரியர் முன்பாகவே மாணவிகள் சண்டையிட்டு  ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அப்போது, அங்கிருந்த வேறொரு பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலின்போது, அரை நிர்வாணமாக பிரதான சாலையில் மாணவர் ஒருவர் ஓட விட்டு தாக்கப்பட்ட காட்சிகளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது மாணவிகள் ஆசிரியர்கள் முன்பாகவே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Must Read : முதுமலையில் ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை.. பதைபதைப்புடன் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதுடன், மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் - ஐயப்பன்.

First published:

Tags: Fight, Palayamkottai, School students, Thirunelveli