கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த கண்ணன் என்பவர் 350 கிலோ எடை கொண்ட நான்கு ஜேசிபி இயந்திர டயர்களை 50 மீட்டர் தூரம் தூக்கி நடந்து வந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த தாமரை குட்டி விலையை சேர்ந்தவர் கண்ணன். இவர் ஏற்கனவே தமிழக அளவில் 8 முறை இரும்பு மனிதன் பட்டம் வென்றுள்ளார். மேலும் 3 முறை தேசிய அளவிலான இரும்பு மனிதன் பட்டமும் வென்றுள்ளார்.
இந்நிலையில் தேசிய அளவிலான இரும்பு மனிதன் பட்டத்தையும் உலக அளவிலான இரும்பு மனிதன் பட்டத்தையும் வெல்ல தற்போது இருந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் கண்ணன், நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரில் நான்கு வழிச்சாலையில் 350 கிலோ எடை கொண்ட நான்கு ஜேசிபி இயந்திர டயர்களை 50 மீட்டர் தூரம் தூக்கி நடந்து வந்து பயிற்சி மேற்கொண்டார். இவர் ஏற்கனவே ஒன்பதரை டன் லாரி மற்றும் 13 டன் லாரி ஆகியவற்றை இழுத்து சாதனையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Record, Thirunelveli