ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

கோயிலுக்குள் மது அருந்தக்கூடாது.. தட்டிக்கேட்ட ஊழியர் வெட்டிக்கொலை.. நெல்லையில் பரபரப்பு

கோயிலுக்குள் மது அருந்தக்கூடாது.. தட்டிக்கேட்ட ஊழியர் வெட்டிக்கொலை.. நெல்லையில் பரபரப்பு

நெல்லையில் கொலை

நெல்லையில் கொலை

Nellai Murder | நெல்லை அருகே கோயிலுக்குள் மது குடித்தவர்களை தட்டிக்கேட்ட ஊழியர், அங்கேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லை மாவட்டம் மேலச்செவலில் நவநீதகிருஷ்ண சுவாமி கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் எனும் நபர் பராமரிப்பு பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று அவர் கோயிலுக்கு வந்தபோது, அங்கே அதே பகுதியைச் சேர்ந்த சிலர் மது குடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தட்டிக்கேட்ட கிருஷ்ணனுக்கும், போதையில் இருந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.

ஆத்திரமடைந்த அக்கும்பல் கிருஷ்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த கிருஷ்ணனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஐந்து பேரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Murder, Tirunelveli