ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

இன்ஸ்டா பெண்கள்தான் குறி.. போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்.. தென்காசி வாலிபர் கைது

இன்ஸ்டா பெண்கள்தான் குறி.. போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்.. தென்காசி வாலிபர் கைது

கைது செய்யப்பட்ட பிரதீப்

கைது செய்யப்பட்ட பிரதீப்

Tirunelveli Cyber Crime | இளம்பெண்களின் புகைப்படத்தை மார்பில் செய்து பாலியல் உறவுக்கு அழைத்து மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தது விசாரணையில் அம்பலம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

அழகுகலை நிபுணராக உள்ள இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து ஆசைக்கு இணங்கும்படி மிரட்டல் விடுத்த வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் அழகுக்கலை நிபுணராக உள்ளார். மர்மநபர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் இவரை தொடர்பு கொண்டுள்ளார். இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்திரித்து அதனை அனுப்பியுள்ளார். மேலும் ஆபாசமாக வீடியோ கால் செய்யும்படி வற்புறுத்தி மிரட்டி வந்துள்ளார். இதனையடுத்து அந்தப்பெண் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி சரவணன் உத்திர விட்டதின் பேரில் சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் தென்காசி மாவட்டம், கீழப்பாவூரைச் சேர்ந்த பிரதீப் (22), என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் பிரதீப்பை கைது செய்து அவரிடமிருந்து ஒரு ஸ்மார்ட் போன் மற்றும் 4 சிம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பிரதீப் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தை பயன்படுத்தி வருபவர் என்றும் மேலும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் இளம்பெண்களின் புகைப்படத்தை தனியாக எடுத்து ஆபாசமாக மார்பிங் செய்து அவர்களுக்கு அனுப்பி அவர்களை தனது பாலியல் ஆசைக்கு இணங்கும் படியும் ஆபாச வீடியோ அழைப்புகளை செய்யும் படியும் தொடர்ச்சியாக ஆபாச மிரட்டல் கொடுத்து வந்ததும் தெரிய வந்ததுள்ளது.

இதையும் படிங்க:  130 ஆண்டுகள் சிறை தண்டனை கைதிக்கு 20 ஆண்டுகள் கடந்து கிடைத்த நீதி.. உண்மை வெளிவந்தது எப்படி?

மேலும் இதுபோன்று பல இளம்பெண்களை பிரதீப்  மிரட்டியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதால்  பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் பிரதீப் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.  மேலும் சமூகவலைதளத்தில் முன்பின் தெரியாத நபர்கள் சமூக வலைதளங்களில் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என்றும் ஆபாச மிரட்டல்கள் ஏதும் இருக்கும் பட்சத்தில் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

 செய்தியாளர் : ஐயப்பன் ( நெல்லை)

First published:

Tags: Crime News, Cyber crime, Local News, Tamil News, Thirunelveli