திருநெல்வேலி மாநகர பகுதியில் அதிமுக ஒற்றை தலைமை குறித்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டதைத் தொடர்ந்து இன்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளராக. ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ஓ .பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக தங்களின் ஆதரவாளர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இவர்கள் இரண்டு பேரின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவர்களுக்கு ஆதரவாக ஒற்றை தலைமை குறித்த வாசகங்கள் கூடிய சுவரொட்டிகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போஸ்டர்
இதன் ஒரு பகுதியாக நெல்லையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. நெல்லை சந்திப்பு, டவுன் ஆகிய பகுதிகளில் ‘எம்ஜிஆர், அம்மாவால் உருவாக்கிய இயக்கத்தை தலைமை ஏற்க வா...‘ ‘தொண்டர்களின் பாதுகாவலர் எடப்பாடியார்...’ என்ற வாசங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
Must Read : அதிமுகவை சாதிக்கட்சியாக்கி விடாதீர்கள்.. ஓபிஎஸ், இபிஎஸ் பொறுப்பில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி
நேற்று நெல்லை மாநகர பகுதிகளில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்த நிலையில் இன்று இபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - ஐயப்பன், திருநெல்வேலி
உங்கள் நகரத்திலிருந்து(Tirunelveli)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.