திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் பூவலிங்கம் இவரது இரண்டு மகன்கள் ஆன பூதத்தான் மற்றும் சிவசங்கரன் ஆகிய இருவரும் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர் பட்டியில் கேம்பிரிட்ஜ் பள்ளியில் பயின்றுள்ளனர். ப்ரீ கேஜி முதலே இரண்டு மாணவர்கள் அந்த பள்ளியில் படித்து வந்துள்ளானர். இந்நிலையில் பூதத்தான் கடந்த 2020-21 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்த கல்வி ஆண்டில் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்ற நிலையில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதேபோன்று கேம்பிரிட்ஜ் பள்ளியில் பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பள்ளியில் பயின்ற பூதலிங்கம் என்ற மாணவர் மட்டும் தேர்வில் தோல்வியடைந்ததாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிறகு பெற்றோர் தமிழ்நாடு அரசு அனைவரையும் தேர்ச்சி என்று அறிவித்த நிலையில் தனது மகன் மட்டும் எப்படி தோல்வி என்று அறிவிக்கப்பட்டார் என்று பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். அதற்கும் எந்த விதமான முறையான பதிலை பள்ளி நிர்வாகம் கொடுக்காத நிலையில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர், காவல்துறை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், பள்ளிக் கல்வித்துறை என பல்வேறு துறைகளிடமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மகனுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
எனினும் இதுவரை உரிய பதில் கிடைக்காத நிலையில் தொடர்ந்து தனது மகனுக்கான நீதி கேட்டு போராடி வந்தார். அதே வேளையில் மீண்டும் பத்தாம் வகுப்பில் பயிலும் மாறு பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பூதலிங்கத்தின் சகோதரர் சிவசங்கரன் பள்ளிக்குச் சென்றபோது உடன் பிறந்த மூத்த சகோதரன் பள்ளிக்கு அழைத்து வந்தால் மட்டுமே அவரையும் பள்ளியில் அனுமதிப்பதாக கூறி அவரையும் பள்ளியிலிருந்து நிர்வாகம் வெளியேற்றியுள்ளது.
இதனால் இரண்டு ஆண்டுகளாக தனது மகன்களுக்கான நீதி கேட்டு பூவலிங்கம் பல்வேறு இடங்களில் மனு அளித்தார். எனினும் முறையான பதில் கிடைக்கப் பெறாத நிலையில் இன்று பூவலிங்கம் அவருடைய மகன்களுடன் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்த நிலையில் அவரது இரண்டு மகன்களும் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தின் மீது ஏரி நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் காவல்துறை முதலில் வந்து பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் அதற்கு எந்தவிதமான முடிவும் எட்டப்படாத நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் அதற்கு உடன்படாத நிலையில் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வருகை தந்து பூவலிங்கம் மற்றும் அவர்களது மகன்கள் பூதத்தான் மற்றும் சிவசங்கர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Also see... 5 வயது சிறுமியின் கைப்பையில் துப்பாக்கி தோட்டா: ஏர்போர்டில் பரபரப்பு
இரண்டு மாணவர்களது பள்ளிக் கல்வி இடைச் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் whatsapp செயலி மூலம் அனுப்பியதை தொடர்ந்து தங்களது போராட்டத்தை கைவிட்டு மேலிருந்து கீழ் இறங்கினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thirunelveli