ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

தென் மாவட்டங்களை திகிலூட்டும் ஜாதிய ரீதியான கொலைகள்.. போலீசார் எடுத்த முக்கிய முடிவு!

தென் மாவட்டங்களை திகிலூட்டும் ஜாதிய ரீதியான கொலைகள்.. போலீசார் எடுத்த முக்கிய முடிவு!

தென் மண்டல ஐஜி

தென் மண்டல ஐஜி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tirunelveli | Tirunelveli

  தென் மாவட்டங்களில் ஜாதிய ரீதியிலான கொலை மற்றும் வன்முறை சம்பவங்களைத் தடுக்க, சிறப்பு படை அமைக்கப்பட்டு உள்ளதாக தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

  திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூரைச் சேர்ந்த வாலிபர் நம்பி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென் மண்டல ஐஜி அசரா கார்க் நெல்லை சரக டி ஐ ஜி ப்ரவேஷ் குமார் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

  இந்த கூட்டத்தில் சாதிய ரீதியிலான கொலைச் சம்பவங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஜாதி ரீதியான வன்முறை சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல ஐஜி அசரா கார்க், தென் மாவட்டங்களில் ஜாதிய ரீதியிலான கொலை குற்றங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை தடுக்க டிஐஜி மற்றும் எஸ்பிக்கள் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் நெல்லை மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

  கடந்த ஆண்டு 184 பேர் குண்டர் சடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டில் மட்டும் 985 பேர் குற்றப்பினை மீறி செயல்பட்டதாக கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் நடைபெறும் தேவர் ஜெயந்தி இம்மானுவேல் சேகரன் ஜெயந்தி போன்றவைகளில் சிறு பிரச்சினைகள் கூட இல்லாமல் சிறப்பாக தென் மாவட்ட காவல்துறை நடத்தியுள்ளது ஜாதியை ரீதியிலான பிரச்சனைகள் வராமல் இருக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

  இதையும் படிங்க | காங்கிரஸ் கட்சி பலமா இருப்பதால் தான் கோஷ்டி மோதலே - நெல்லையில் தனுஷ்கோடி ஆதித்தன் பேச்சு

  கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு 15 கோடி ரூபாய் வரை வங்கி கணக்கில் உள்ள பணம் முடக்கப்பட்டுள்ளது.

  தென் மாவட்டங்களில் ஜாதியை மோதலில் ஈடுபட்டு சிறை சென்று மீண்டும் வந்து குற்றச்சம்பவங்களில் அவர்கள் ஈடுபடாமல் இருக்க முன் எச்சரிக்கை கைதுகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மற்றும் ஊர் கூட்டங்கள் நடத்தி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுரை வழங்கும் செயல்கள் போன்றவை செய்யப்பட்டு வருகிறது. குற்றச் செயல்களில் சிறார்கள் ஈடுபட்டாலும் நீதிமன்றம் மூலம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

  செய்தியாளர்: ஐயப்பன், நெல்லை.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Nellai, Tirunelveli