Home /News /tirunelveli /

எடப்பாடி பழனிசாமி கட்சி ஆரம்பித்தால் அவரது மகன், மனைவிகூட சேர்ந்திருக்கமாட்டார்கள் - சீமான் விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி கட்சி ஆரம்பித்தால் அவரது மகன், மனைவிகூட சேர்ந்திருக்கமாட்டார்கள் - சீமான் விமர்சனம்

சீமான்

சீமான்

Tirunelveli : எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கட்சி ஆரம்பித்திருந்தால் அவரது மகன் மற்றும் மனைவிகூட சேர்ந்திருக்கமாட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருநெல்வேலியில் பேசுகையில் விமர்சித்தார்.

  திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில், சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மத்திய மாநில அரசுகளை மட்டுமல்லாது அதிமுகவையும் விமர்சித்து பேசினார்.

  சீமான் பேசுகையில், முன் எப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் கஞ்சா, அபின் போன்ற போதை பொருள்கள் அதிகம் பரவுகின்றன. 9 காவல் நிலைய மரணங்கள் கடந்த  ஓராண்டில் தமிழகத்தில் நடந்துள்ளது. அனிதா மரணத்திற்கு அழுதவர்கள் இந்த ஆட்சியில் உயிர் நீத்தவர்கள் பற்றி ஒரு சொல்லும் சொல்லவில்லை. மத்திய அரசை அனுசரிக்கவில்லை என்றால் அங்கிருந்து பணம் வராது என்பதால் அனுசரித்து செல்கின்றனர் என்றார்.

  இந்தியாவின், பொருளாதரத்தை நிறைவேற்றுவதில் முதலிடத்தில் மராட்டிய மாநிலமும், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும் உள்ளன. மத்திய அரசிடம் விமானம், ஏர்போர்ட், துறைமுகம், கல்வி என எதுவும் கிடையாது. அனைத்தும் தனியார் வசம் போய் கொண்டிருக்கிறது சுடுகாட்டுக்கும் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. ‘நாடா இது சுடுகாடா’ என்பதே தெரியாமல் கொடுமையாக போய்கொண்டிருக்கிறது.

  ஒரு கார் வாங்கினால் ரூ.6 லட்சம் சாலை வரி எடுக்கப்படுகிறது. தண்ணீர், சாலை, மின்சாரம், கல்வி உள்ளிட்ட அனைத்துக்கும் வரி விதிக்கப்பட்டு விட்டு, அனைத்தையும் தனியாரிடம் பெறவேண்டியுள்ளது. முதல்வர்கள் அகில இந்தியாவின் புரோக்கர்களாக உள்ளனர். பிரதமர் சர்வதேச புரோக்கராக செயல்படுகிறார் என்று சீமான் விமர்சித்தார்.

  மாங்கிபாத் என மூடிய அறையில் பேசுவதைவிட்டு விட்டு, பிரதமர் செய்தியாளரை சந்தித்து பேசவேண்டும். நாங்கள் கேட்பது தமிழ் தேசியதிற்கான போராட்டம் அல்ல உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை போராட்டத்திற்கான முன்னெடுப்பு. 75% தமிழ்நாட்டு வரி தமிழருக்கு 25% பொது நிதி என்பதே இந்த சீமானின் நிலை. பொது வரிக்கான கணக்கு கட்டாயம் காட்டவேண்டும். எல்லா உரிமையையும் இழந்துவிட்டு அடிமையாக வாழ நாங்கள் தயாராக இல்லை.

  சுதந்திரத்திற்காக பல போராட்டங்களை தமிழர்கள் கண்டுள்ளனர். செய்யாமல் ஆர்எஸ்எஸ் காரர்கள் ஆட்சி செய்கிறார்கள். ஆர்எஸ்எஸ் சுதந்திர போராட்டத்திற்காக செய்தது என்ன என்பது குறித்து சொல்ல வேண்டும். வெள்ளை கார ராணிகள் வரும்போது குச்சி வைத்து அணிவகுப்பு மரியாதை செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். காஷ்மீர் இஸ்லாமியர்களை இந்திய நாட்டில் சேர சொல்பவர்கள் இங்குள்ள இஸ்லாமியர்களை வெளிநாட்டிற்கு செல்ல சொல்கிறார்கள்.

  Must Read : 17வயது சிறுமியை கடத்தி மது கொடுத்து பாலியல் வன்கொடுமை - புதுக்கோட்டையில் கொடூரம்

  அரசியல் கொள்கை என்பதே இல்லாதவர்கள் பாஜகவினர். எல்லோருக்குமான அரசு என்பது இந்தியாவில்  இல்லை. மக்களுக்கான அரசு உருவாக வேண்டும் அது நாம் தமிழர்கட்சியின் அரசாக இருக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மகனுக்கு முடி சூட்ட காத்திருக்கிறார். மறுபுரம் அதிமுக, எடப்பாடி பழனிசாமி கட்சி ஆரம்பித்தால் அவரது மகன் மனைவிகூட சேர்ந்திருக்கமாட்டார்கள். என்று கூறிய சீமான், இந்த மண்ணை சேர்ந்த 2 பேர் அடிமையாகி இருக்கிறார்கள் என ஓபிஎஸ்-ஐயும் விமர்சித்துப் பேசினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்திய நாடு இரண்டாக பிரிக்கும் நிலை விரைவில் உருவாகும் என்று கூறிய சீமான், திராவிட நாடு என இவர்கள் சொல்வதற்கு பதில் தென் இந்தியா என சொல்லிருக்கலாம். அனைத்து சட்டங்களையும் நாட்டில் பாராளுமன்ற விவாதம் செய்து கொண்டுவருவதல்ல அனைத்தும் நீதிமன்றத்தின் உத்தரவில் தான் அமலுக்கு வருகிறது. என்று பேசினார் இதில் நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  செய்தியாளர் - ஐயப்பன்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Seeman, Tirunelveli

  அடுத்த செய்தி