ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

‘தமிழ்நாட்டை நான் தான் ஆளப்போறேன்.. எல்லா வளமும் நமக்கு தான்’ - சீமான் பேச்சு

‘தமிழ்நாட்டை நான் தான் ஆளப்போறேன்.. எல்லா வளமும் நமக்கு தான்’ - சீமான் பேச்சு

சீமான்

சீமான்

Seeman : திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ் மக்கள் தன்னாட்சி மாநாட்டில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 4 அல்லது 5 ஆண்டுகளில் தமிழகத்தில் நான் தான் ஆள்வேன் என்று கூறினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tirunelveli, India

  தமிழ் தேச தன்னுரிமை கட்சியின், தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு திருநெல்வேலியில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

  அப்போது அவர் மத்திய, மாநில அரசுகளை மட்டுமல்லாது அதிமுகவையும் விமர்சித்து பேசினார். தெற்காசியா முழுதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று ஆய்வறிக்கைகள் சொல்கிறது. தமிழ் முன்னோர்கள் வைத்திருந்த வாளை நம்மால் இப்போது தூக்க கூட முடியாது. ஆனால் அந்த காலத்தில் அவர்கள் வாளைதூக்கி குதிரை மேல் நின்று வீசியுள்ளனர் என்று கூறினார்.

  பீட்சா, பர்கர் சாப்பிடும் நம்மால் அதனை தூக்க கூட முடியாது. தமிழனுடைய அறிவு நெற்களஞ்சியம் போல்  உலகம் முழுவதும் கொட்டி கிடக்கிறது. தமிழில் எழுதிவைத்த பாக்களை படித்து பார்த்து திட்டம் போட்டால் நாடு நலனாக இருக்கும். 6 லட்சம் கோடி கடன் தமிழக  அரசுக்கு கடனிருக்கும் போது 80 கோடியில் பேனா வைக்க திட்டம் போடுகிறார்கள். என கலைஞர் நினைவிடம் அருகே பேனா நினைவுச் சின்னம் வைக்கப் போவதை விமர்சித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர், இலங்கையில் அதிகாரமும் இல்லை அரசும் இல்லை. இந்த நிலையிலும் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி வந்ததாக கேரள மீனவர்கள் ஒருவர்கூட இதுவரை கைது செய்யப்பட்டது கிடையாது. அதற்கு காரணம் கேரளவின் ஆட்சியாளர்கள் அந்த மண்ணை சார்ந்தவர்கள். தமிழகத்தை வெளியே இருந்து வந்தவர்களே ஆட்சி செய்கிறார்கள். இந்த மண்ணை சேர்ந்த 2 பேர் அடிமையாகி இருக்கிறார்கள் என விமர்சித்தார்.

  பெருந்தலைவர் காமராஜர் பல்லாயிரம் படிப்பகங்களை திறந்து படிக்கவைத்தார். திராவிட மாடல் பல்லாயிரம் குடிப்பகங்களை திறந்து குடிக்க வைக்கிறது. நீரை தேக்கிவைக்க பல வழிகள் இருந்தும் அதனை செய்யாமல் 50 ஆயிரம் கோடி செலவு செய்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமைக்க இருக்கிறார்கள். அதிகபட்சமாக 4 அல்லது 5 ஆண்டுகளில் தமிழகத்தில் நான் தான் (ஆட்சி செய்வேன்). தமிழகத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து வளமும் நமக்கு தான்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஓடி வரும் நதியில் நமக்கு தேவையான நீரை சேமிக்கும் நிலை என்று உருவாகிறதோ அன்று தான் நாடு உருப்புடும். என்னை தீவரவாதி போல் சித்தரிக்கின்றனர். ஜப்பானில் கடல் அலையில் மின்சாரம் தயாரிக்கிறார்கள் அந்த தொழில் நுட்பத்தை ஏன் நாம் பயன்படுத்த முடியவில்லை. காற்றாலை சூரிய ஒளி மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் செய்கின்றன.  ஆனால், பாதிப்பை ஏற்படுத்தும் அணு மின்சாரம் அனல் மின்சாரம் ஆகியவையை அரசு தான் உற்பத்தி செய்கிறது.

  Must Read : மாற்றுத்திறனாளி மாணவி கோரிக்கையை ஏற்று பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்! - குவியும் பாராட்டு

  மின்சாரம் உற்பத்தி செய்யும் அதானி வளம் பெறவேண்டும் என்ற நோக்கில் தான் மின்சாரத்தின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு வற்புறுத்துகிறது. நிலக்கரியை தனியாரிடம் வாங்க மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது என சந்திரசேகர ராவ் சொல்கிறார். யார் அந்த தனியார் என்று பார்த்தால் அதானி. ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒளித்து கூட்டாட்சி முறையை கொண்டுவர வேண்டும். எல்லோருக்குமான அரசு என்பது இந்தியாவில்  இல்லை. மக்களுக்கான அரசு உருவாக வேண்டும் அது நாம் தமிழர்கட்சியின் அரசாக இருக்கும் என்று சீமான் கூறினார்.

  செய்தியாளர் - ஐயப்பன்

  Published by:Suresh V
  First published:

  Tags: Naam Tamilar katchi, Seeman, Thirunelveli