ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

மகளுக்கு நகை.. மனைவிக்கு பணம் - கேரள நபரிடம் ரூ.50 லட்சத்தை சுருட்டிய மோசடி மன்னன் கைது

மகளுக்கு நகை.. மனைவிக்கு பணம் - கேரள நபரிடம் ரூ.50 லட்சத்தை சுருட்டிய மோசடி மன்னன் கைது

மோசடி மன்னன் பாலமுருகன்

மோசடி மன்னன் பாலமுருகன்

Nellai News | காசோலையை பயன்படுத்தி ரூ.40 லட்சம் வங்கி கணக்கில் இருந்து சுருட்டியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tirunelveli, India

  நெல்லை மாவட்டம் மேல கருங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் பாலமுருகன். இவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த பாபு ஜேக்கப் என்பவரிடம் தொழில் செய்வதற்காக ரூ.10 கோடி கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார். மேலும் அதற்கான பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் மற்றும் நான்கு வங்கி காசோலைகள் பெற்றுக்கொண்டு கடன் தொகையை பெற்றுத்தராமல் பல காரணங்களை கூறி காலதாமதப்படுத்தி வந்துள்ளார்.

  மேலும், பாபு ஜேக்கப்பின் காசோலையை பயன்படுத்தி ரூ.40 லட்சம் வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டதாக போலீசில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் பாலமுருகன் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

  இந்நிலையில், பாலமுருகன் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தலைமறைவாக இருப்பதாக மாநகர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஆய்வாளர் திருப்பதி தலைமையிலான போலீசார் பாலமுருகனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

  இதையும் படிங்க : போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை... நீதிமன்றம் தீர்ப்பு...

  மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், வங்கி கணக்கில் இருந்து எடுத்த ரூ.40 லட்சத்தை பாலமுருகனின் மகன் குமாரசாமியின் பெயரில் ரூ.3 லட்சத்தை நிரந்தர வைப்பு தொகையாகவும், மனைவி சாந்தியின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சத்தை பரிமாற்றம் செய்து வைத்துள்ளது தெரியவந்தது.

  பின்னர் பாலமுருகனின் மகளுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் வாங்கி கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, குற்றப்பிரிவு போலீசார் அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமுறைவாக உள்ள பாலமுருகனின் மனைவி சாந்தி மற்றும் மகன் குமாரசாமி ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  இதையும் படிங்க : மதுரை அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து.! ஒரு பெண் உட்பட 5 பேர் உடல் கருகி பலி!

  இந்நிலையில், மாநகர காவல் துறையை ஆணையாளர் அவினாஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் கடன் பெற்று செல்வதாக கூறும் தனி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், இதுபோன்ற மோசடி கண்டறியப்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

  செய்தியாளர் : ஐயப்பன் - திருநெல்வேலி

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Tirunelveli