ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, கொலை..பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது...நெல்லை போலீசார் அதிரடி..

கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, கொலை..பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது...நெல்லை போலீசார் அதிரடி..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற ராக்கெட்ராஜாவை நெல்லை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tirunelveli, India

  தென் தமிழகத்தை கலக்கி வந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா, கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த நிலையில், வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 1990களில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி என பல்வேறு சம்பவங்களில் கொடிகட்டி பறந்து வந்த ராக்கெட் ராஜா தற்போது கொலை வழக்கு ஒன்றில் நெல்லை போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

  நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கடந்த கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்

  இந்நிலையில் சாமிதுரை கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தென் தமிழகத்தை கலக்கி வந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட சாமிதுரை தரப்பிற்கும், ராக்கெட் ராஜா தரப்பிற்கும் இடைய ஜாதி ரீதியாக ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

  Read More : பிடித்த யூடியூபரை பார்க்க 300 கிமீ தூரம் சைக்களில் சென்று சிறுவன்.. கடைசியில் ட்விஸ்ட்

  சம்பவத்தன்று சாமிதுரைக்கு திருமண ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில், அவரை திட்டமிட்டு ராக்கெட் ராஜா தரப்பினர் படுகொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் நெல்லை போலீசார் ராக்கெட் ராஜாவை தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார்.

  இந்நிலையில்தான், திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற ராக்கெட்ராஜாவை நெல்லை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். ராக்கெட் ராஜா மீது ஐந்து கொலை வழக்குகள் உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன

  நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த ஆனைக்குடி பகுதியைச் சேர்ந்த இவர், ஒரு காலத்தில் ரவுடிகள் சாம்ராஜியத்தில் கொடி கட்டி பறந்தவராவார். 1990 கால கட்டங்களில் ஜாதி சண்டை. கட்டப்பஞ்சாயத்து, அடிதடி என பல்வேறு சம்பவங்களில் ராக்கெட் ராஜா ஈடுபட்டு வந்தார்

  நாடார் சமுதாயத்தின் முக்கிய தலைவராக அறியப்படும் கராத்தே செல்வினின் சீடராக இருந்தார். பின்னாளில் வெங்கடேஷ் பண்ணையாரின் வலது கரமாக இருந்து வந்தார் அவரது மறைவுக்கு பிறகு சுபாஷ் பண்ணையாருடன் இணைந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

  குறிப்பாக தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பசுபதி பாண்டியன் கொலை வழக்கு, பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கு என பல்வேறு கொலை வழக்குகளில் சந்தேகிக்கப்பட்டு ரவுடிகள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளார்.இவரது வீட்டில் ஏகே 47 துப்பாக்கிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  ஸ்கெட்ச் போட்டு குற்றச் செயல்களை முடிப்பதில் ராக்கெட் வேகத்தில் செயல்படுவதால் இவரை ராக்கெட் ராஜா என்று அடைமொழியுடன் அழைத்து வந்தனர். 2017 ஆம் ஆண்டு காவல்துறை தன்னை என்கவுண்டரில் சுட்டு கொல்ல திட்டமிட்டிருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

  இது போன்று பிரபல ரவுடியாக வலம் வந்த ராக்கெட் ராஜா சமீப காலமாக அரசியலில் ஆர்வம் காட்ட தொடங்கினார்.ஏற்கனவே நாடார் மக்கள் சக்தி என்ற அமைப்பை தொடங்கியவர் பின்னாளில் பனங்காட்டு படை என்ற கட்சியை தொடங்கி அதன் நிறுவனத் தலைவராக செயல்பட்டு வருகிறார்

  தற்போது கர்நாடக சிறையில் இருக்கும் பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாருடன் இணைந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். குறிப்பாக இருவரும் ஆலங்குளம் பகுதியில் ஹரி நாடாருக்காக பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டரில் வந்து இறங்கி ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்க செய்தனர்

  தேர்தலுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. பண மோசடி வழக்கில் ஹரிநாடார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அடுத்தடுத்து ராக்கெட் ராஜா மீது சிறையில் இருந்தபடி ஹரி நாடார் பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்து வருகிறார். இது போன்ற சூழலில் ராக்கெட் ராஜா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Arrested, Crime News, Tirunelveli