முகப்பு /செய்தி /திருநெல்வேலி / இவ்வளவு நகை போட்டிருந்தா உதவித்தொகை தர மாட்டாங்க... மூதாட்டியிடம் நைசாக பேசி ஏமாற்றிய மர்மபெண்

இவ்வளவு நகை போட்டிருந்தா உதவித்தொகை தர மாட்டாங்க... மூதாட்டியிடம் நைசாக பேசி ஏமாற்றிய மர்மபெண்

நகை, பணத்தை பறிகொடுத்த மூதாட்டி

நகை, பணத்தை பறிகொடுத்த மூதாட்டி

Tirunelveli district News : திருநெல்வேலி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மூதாட்டியிடம் முதியோர் உதவித் தொகை வாங்கித் தருவதாக அழைத்து சென்று அவரிடமிருந்த 6 பவுன் நகை மற்றும் 1,500 ரூபாய் பணத்தை அபகரித்து சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tirunelveli, India

தூத்துக்குடி மாவட்டம் ராமானுஜம்புதூர் வடக்கு பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்தவர் சார்ந்தவர் நம்பி இவரது மனைவி பேச்சியம்மாள் (65). இவர் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னர் ஊருக்கு செல்வதற்காக வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்துள்ளார்.

பேச்சியம்மாள் கை கழுத்தில் நகை அணிந்திருந்ததை நோட்டமிட்ட மர்ம பெண் ஒருவர், அதை அபகரிக்கும் நோக்கத்தோடு பேச்சியம்மாளிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். அப்போது அவர் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தான் வேலை செய்வதாகவும் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வாங்கி தருகிறேன் என்று கூறி மூதாட்டியை பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர், கழுத்தில் நகைகள் இருந்தால் பணம் தரமாட்டார்கள் என்று கூறி கழுத்தில் கிடந்த செயின் கம்மலை கழட்டி தரும்படி கேட்டுள்ளார். பேச்சியம்மாளும் அந்த பெண்ணின் ஆசை வார்த்தையை நம்பி, தான் அணிந்திருந்த சுமார் 6 பவுன் நகைகளையும் 1,500 ரூபாய் ரொக்க பணத்தையும் கொடுத்துள்ளார்.

இவை அனைத்தையும் வாங்கிக் கொண்ட அந்த மர்ம பெண் ஒரு கையெழுத்து மட்டும் போட வேண்டும் என்று கூறி விட்டு, அங்கிருந்து நைசாக எஸ்கேப் ஆகியுள்ளார். நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் வராததால் அதிர்ச்சி அடைந்த பேச்சியம்மாள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அங்கிருந்தவர்கள், ‘இது மருத்துவமனை இங்கே பணமெல்லாம் கொடுக்க மாட்டாங்க’ எனறு சொன்ன பிறகே தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து, அழுது புலம்பியுள்ளார். இதைப்பார்த்த காவல்துறையினர் அரசு மருத்துவமனை புற காவல் நிலையத்தில் வைத்து அந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Must Read : கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பஞ்சாயத்து தலைவர் கட்டையால் தாக்கி படுகொலை - ஓசூர் அருகே பயங்கரம்

பட்டப் பகலில் மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தை அபகரித்து சென்ற சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    செய்தியாளர் - ஐயப்பன்.

    First published:

    Tags: Cheating, Crime News, Gold Theft, Thirunelveli, Tirunelveli