சென்னை ஆவடி பகுதியை அடுத்த கோயில் பதாகை பகுதிகளில் கடந்த செப்டம்பர் 24ம் தேதி சுமார் 3 வீடுகளில் பூட்டை உடைத்து சுமார் 72 சவரன் நகைகளை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து அங்கு அமைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியிருந்ததது.
அதனடிப்படையில் இக்கொள்ளையில் ஈடுபட்ட நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள நம்பிதலைவன் பட்டயம் பகுதியை சேர்ந்த சூட்டு சுரேஷ், ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ், பாண்டி உட்பட மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்பு அவர்களை அழைத்து வந்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி கொள்ளையர்களிடமிருந்து கொள்ளைபோன 72 சவரன் நகைகளை பறிமுதல் செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் அருணாசலராஜா தலைமையிலான 6 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் நெல்லை மாவட்டம் வள்ளியூரிலுள்ள ஒரு பிரபல கடையான எம்.எஸ்.ஜுவல்லரியில் விற்றதாக கொள்ளையன் சூட்டு சுரேஷ் கூறினார்.
இதையும் படிங்க : கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!
இதனால் சூட்டு சுரேஷை அழைத்து வந்து அந்த நகைக்கடை உரிமையாளர் அசன் முகைதீனிடம் 17 சவரன் நகையை மீட்டனர். கடந்த மாதம் இதே குற்றவாளியை கோவை மாவட்ட போலீசார் கோவையில் நடை ற்ற திருட்டு ஒன்றில் சூட்டு சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் வள்ளியூர் எம்.எஸ்.ஜுவல்லரி நகைக்கடையில் விற்றதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
கோவை போலீசார் நகைக்கடை உரிமையாளர் அசன் முகத்தினிடம் விசாரணை மேற்கொண்டு 55 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றனர்.
இதனிடையே அதே குற்றவாளி சென்னை ஆவடியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் கைதாகி சென்னை போலீசார் இன்று அழைத்து வந்து 17 பவுன் நகையை மீட்டுள்ளனர்.
கடை உரிமையாளர் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர் பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அசன் முகைதீனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் - சிவமணி (திருநெல்வேலி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Tirunelveli