ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

பொங்கல் பண்டிகை... பூக்களின் விலை கிடு கிடு உயர்வு

பொங்கல் பண்டிகை... பூக்களின் விலை கிடு கிடு உயர்வு

பூக்கள் விலை உயர்வு

பூக்கள் விலை உயர்வு

Pongal Festival : நெல்லை பூச்சந்தையில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை பூச்சந்தையில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது மல்லிகைப்பூ வரத்தில் இல்லாத காரணத்தினால் பிச்சி பூ கிலோ 3000 வரை விற்பனை செய்யப்பட்டது.

பொங்கல் பண்டிகை நாளை முழுவதும் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது இதனால் பூக்களின் சேவை அதிகமாக இருப்பதால் நெல்லை பூ மார்க்கெட்டில் பூ வரத்து அதிகமாக இருந்தாலும் விலை உயர்ந்தே காணப்படுகிறது

சாதாரண நாட்களில் செவ்வரளி சாமந்தி உள்ளிட்ட பூக்களின் விலை கிலோவிற்கு 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வரளி சாமந்தி  பூக்களின் விலை 1250 வரை விற்கப்பட்டது. இதே போல் பிச்சிப்பூ கிலோவிற்கு 3000 முதல் 3500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது மல்லிகை பூ வரத்து இல்லை இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தியாளர்: ஐயப்பன் 

First published:

Tags: Local News, Pongal 2023, Pongal festival, Tamil News, Tirunelveli