ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் நடந்த பரிவேட்டை நிகழ்ச்சி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் நடந்த பரிவேட்டை நிகழ்ச்சி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

 பரிவேட்டைக்கு செல்லும் நெல்லையப்பர்

பரிவேட்டைக்கு செல்லும் நெல்லையப்பர்

Tirunelveli | அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு பரிவேட்டை  நடைபெற்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirunelveli, India

  தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும் ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகவும் நெல் வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக் காரணமான சுவாமி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு நிகழ்வாக நவராத்திரி விஜயதசமியை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர் (சந்திரசேகரர் ) வெள்ளிக் குதிரை வாகனத்தில் பரி வேட்டைக்கு செல்லும் நிகழ்வு  நடைபெற்றது.

  வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி சந்திரசேகரர் சர்வ அலங்காரத்துடன் வில் அம்புடன் கோவிலில் இருந்து புறப்பட்டு அருகில் உள்ள கிராமமான ராமையன்பட்டிக்கு பரிவேட்டைக்காக கிளம்பினார். பொதுவாக சம்காரத்திற்கு அம்மன் வருவது இல்லை. ஆனால் மகிஷ சம்ஹாரம்  அம்பாளால் நடத்தப்படுவது. எனவே  நெல்லை பகுதிகளில் முதன்மையான புட்டாரத்தி அம்மன் நெல்லையப்பரை தடுத்து நிறுத்த எழுந்தருளினார்.

  ஆனால் சுவாமி நெல்லையப்பர் விரைவாக பாரிவேட்டை நிகழ்ச்சி சென்றுவிட்டார். அங்கு வன்னி மரத்தடியில் பூஜைகள் நடத்தப்பட்டு வன்னி மரத்தை அம்பால் விழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வன்னிமரம் சம்காரம் அதிக சக்தியை வழங்கும். பரி வேட்டை முடிந்து வந்த நெல்லையப்பரை எல்லை காவல் தெய்வமான புட்டாரத்தி  அம்மன் மூன்று முறை வலம் வந்து மகிஷனை வதம் செய்ய ஆசீர்வாதம் பெற்று சென்றார்.

  Also see... குமரி பகவதியம்மன் கோயில் திருவிழாவில் பரிவேட்டை நிகழ்ச்சி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

  உலகத்தில் உள்ள மக்கள் சுபிட்சமாக இருக்கவும் இழந்த செல்வங்களை மீட்டு எடுக்கவும் இந்த பரிவேட்டை நிகழ்வு  நடைபெறுவது என்பது நம்பிக்கை.

  செய்தியாளர்: ஐயப்பன், திருநெல்வேலி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Tirunelveli, Vijayadasami