ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

திருமணத்திற்கு வெறும் 10 நாட்கள்தான்... சமைக்க பழக சொல்லி தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை!

திருமணத்திற்கு வெறும் 10 நாட்கள்தான்... சமைக்க பழக சொல்லி தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை!

உயிரிழந்த இளம்பெண்

உயிரிழந்த இளம்பெண்

Tirunelveli suicide | திருமணத்திற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் வேலை செய்ய பழகி கொல் என தாய் கண்டித்ததால் இளம்பெண் விரக்தியில் தற்கொலை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli | Tirunelveli

நெல்லை அருகே சமையல் கற்றுக்கொள்ள சொல்லி தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் மூனைஞ்சிபட்டி அருகே உள்ள கீழகோடன் குளம் வடக்கு தெருவை சேர்ந்த குப்புராஜ் - கனகமணி தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். குப்புராஜ் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் அவரது முதல் மகளான கிருஷ்டில்லா மேரிக்கு திருமண நிச்சயிக்கப்பட்டு வரும் ஒன்றாம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்தனர்.

இந்த நிலையில் கிறிஸ்டிலாமேரி வீட்டு வேலை செய்யாமல் அடிக்கடி செல்போன் பார்த்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாய் உனக்கு திருமணம் நடக்க உள்ளது, அதற்குள் சமையல் வேலைகளை கற்றுக் கொள்ள என கண்டித்துள்ளார். இதனால் வேதனடைந்த கிறிஸ்டில்லா மேரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விவசாய பணிக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.

இதனால் மயக்கமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மூலக்கரைப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Local News, Nellai, Suicide, Tirunelveli