ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

1½ வயது குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை... ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய சோகம்!

1½ வயது குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை... ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய சோகம்!

தற்கொலை

தற்கொலை

ஒன்றரை வயது மகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருநெல்வேலியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Tirunelveli, India

  நெல்லை மாவட்டம் தேவர்குளம் அடுத்த வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் தனது தந்தைக்கு உதவியாக பால் வியாபாரம் செய்து வரும் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீனா என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் அகிமா என்ற பெண் குழந்தை உள்ளது.

  இந்நிலையில் மகேந்திரன் ஊரின் அருகே உள்ள தோட்டத்திற்கு புறப்பட்டு சென்ற நிலையில் பிரவீனமும் அவரது குழந்தை அகிமாவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். வேலைகளை முடித்துவிட்டு பிரவீனாவின் தந்தை முத்துப்பாண்டி மகளை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தபோது அங்குள்ள அறையில் ஒரே சேலையில் தாய்- மகள் இருவரும் இரண்டு முனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

  அவர் அலரிய சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்து தேவர்குளம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

  Also see... பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம்... போக்சோவில் கைதான தாளாளர் புழல் சிறையில் அடைப்பு!

  ஒன்றை வயது மகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. உடலில் ஏதேனும் பிரச்சனையா ?குடும்ப தகராறா என்பது குறித்து தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  செய்தியாளர்: ஐயப்பன், நெல்லை

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Child, Commit suicide, Crime News, Mother, Nellai