Home /News /tirunelveli /

டிஜிபி சைலேந்திர பாபு பெயரில் காவலரிடம் நூதன முறையில் ரூ.7.25 லட்சம் மோசடி

டிஜிபி சைலேந்திர பாபு பெயரில் காவலரிடம் நூதன முறையில் ரூ.7.25 லட்சம் மோசடி

சைபர் கிரைம் மோசடி

சைபர் கிரைம் மோசடி

நைஜீரியன் ஸ்கேம் என அழைக்கப்படும் இந்த மோசடியில் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரே பணத்தை இழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India
பரிசு கூப்பன் தருவதாக டிஜிபி படம் போட்டு வாட்ஸ் அப் மூலம் வந்த செய்தியைச் நம்பி,  மணிமுத்தாறு 12வது பெட்டாலியன் கமாண்டண்ட் டி கார்த்திகேயன் ரூ.7.25 லட்சம் பணத்தை இழந்துள்ளார். இந்த மோசடி சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையின் மூலம் பரிசு கூப்பன் விழுந்திருப்பதாகவும் அதற்காக முன் பணம் செலுத்த வேண்டும் எனவும் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு படத்துடன் மணிமுத்தாறு பனிரெண்டாவது பட்டாலியன் கமாண்டன்ட் கார்த்திகேயனுக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது. தொடர்ந்து இந்த செய்தி வரவே அவர் சிறிது சிறிதாக தனது கணக்கிலிருந்து பணத்தை அனுப்பி உள்ளார்.

அமேசான் மூலம் பல லட்ச ரூபாய் பரிசு பணம் அனுப்பி வைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டதாக தெரிகிறது. சுமார் 7,25,000 வரை அவர் பணத்தை அனுப்பி உள்ளார். இரண்டு மாதங்கள் கழித்தும் பரிசு பணம் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார். இதனை அடுத்து கார்த்திகேயன் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: தனியார் பால் விலை உயர்வு.. ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் சைபர் கிரைம் தனிப்படை போலீசாரை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். தனிப்படை போலீசார் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.  நைஜீரியன் ஸ்கேம் என அழைக்கப்படும் இதில் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரே பணத்தை இழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Published by:Murugesh M
First published:

Tags: Cyber fraud, Police, Sylendra Babu

அடுத்த செய்தி