ஹோம் /நியூஸ் /Tirunelveli /

திருமணமான பெண் கூட்டுபாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்தும் மிரட்டிய கொடூரம்... நெல்லையில் பரபரப்பு சம்பவம்

திருமணமான பெண் கூட்டுபாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்தும் மிரட்டிய கொடூரம்... நெல்லையில் பரபரப்பு சம்பவம்

மாதிரி படம்

மாதிரி படம்

நெல்லை மாவட்டத்தில் திருமணமான பெண்ணை கூட்டு  பாலியல் பலாத்காரம் செய்ததோடு அதனை செல் போனில்  படம்பிடித்து  மிரட்டல் விடுத்த 5 நபர்களில் ஒருவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருநெல்வேலி மாவட்டம் இட்டமொழி பகுதியைச் சேர்ந்த 38 வயதான பெண் திருமணமாகி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று விறகு சேகரிப்பது வழக்கம். அவ்வாறு சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவர் பெண்ணை கண்காணித்து வந்துள்ளார். சம்பவத்தன்று நாகலிங்கம் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து பெண்ணை பின் தொடர்ந்துள்ளார்.

ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் பெண்ணை வழிமறித்த ஐவரும் வாயைப் பொத்தி காட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து  விசாரணை நடத்த வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜகுமாரியை விசாரணை அதிகாரியாக வள்ளியூர் ஏஎஸ்பி சமய சிங் மீனா நியமித்தார்.  அவருடன் இணைந்து  திசையன்விளை போலீசார் இட்டமொழி பகுதிக்குச் சென்று விசாரணை செய்தனர். இச்சம்பவத்தில் நாகலிங்கம் என்பவரோடு இணைந்து 2 இளைஞர்கள், 2 சிறார்கள் உள்ளிட்ட 5 பேர் பெண்ண கூட்டு பாலியில் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

மாமியார் கொடுமை தாங்கமுடியாமல் பெண் தற்கொலை - திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்

அதோடு அவர்கள் பலாத்காரம் செய்ததை செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டியதும் தெரியவந்தது. நாகலிங்கத்தை கைது செய்த போலீசார் தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

இட்டமொழிப் பகுதியில் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான நபர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமான பெண்ணை ஐந்து பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Nellai, Thirunelveli