மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், “மதுரையை சேர்ந்த நான் நெல்லை மாவட்டத்தில் வசித்து வருகிறேன். என்னுடன் ஏர்வாடி பகுதியை சேர்ந்த மத போதகர் சாமுவேல் என்பவர் 10 ஆண்டுகளாக நட்பாக பழகினார். மேலும் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி மனைவி போல் வாழ்ந்து வந்தார். மேலும் எனக்கு தெரியாமல் மத போதகர் சாமுவேல் என்பவர் சென்னையில் சேர்ந்த பிளசி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார்.
என்னை திருமணம் செய்வதாக கூறிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது குறித்து கேட்டதற்கு தனக்கு திருமணமே ஆகவில்லை என்று ஏமாற்றி கொண்டிருக்கிறார். மேலும் நான் தொலைபேசியில் அவரிடம் பேசினால் தகாத வார்த்தைகளை பேசி என்னை திட்டுகிறார். என்னை பலமுறை அவர் செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து வைத்திருக்கிறார். ஏதாவது பேசினால் அந்தப் படங்களை வைத்து என்னை மிரட்டுகிறார். மேலும் எனக்கு பலமுறை பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். அவர் விருப்பத்திற்கு இணங்க மறுத்தால் என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார்.
எனக்கு குடும்ப கஷ்டம் என கூறி ரூ.2 லட்சம் வரை என்னிடம் பெற்றுக் கொண்டு திருப்பி தர மறுத்து வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால் அவரது மாமா முத்து ஜேம்ஸ் என்பவரை வைத்து கொலை மிரட்டல் பிடித்து வருகிறார். மேலும் இதுபோன்ற பல்வேறு சம்பவங்களின் காரணமாக மனமடைந்து தற்கொலை முயற்சி செய்தபோது என்னை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றினர். என்னை போல் இனி வேற யாரும் பாதிக்கப்படக்கூடாது. என்னை ஏமாற்றிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனிடையே, மத போதகர் சாமுவேல் பணி செய்த இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் பணியிட மாறுதல் செய்தது காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதமே ராஜினாமா செய்ததாகவும் ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் பெயர்களாக பரவி வருகிறது. இவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனியாக யூடியூப் சேனல் ஒன்றும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : ஐயப்பன் - திருநெல்வேலி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Madurai, Tirunelveli