ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

தீவிரமாக பரவும் மெட்ராஸ் ஐ.. பள்ளி மாணவர்களுக்கு அதிகம் பரவுகிறது

தீவிரமாக பரவும் மெட்ராஸ் ஐ.. பள்ளி மாணவர்களுக்கு அதிகம் பரவுகிறது

மெட்ராஸ் ஐ

மெட்ராஸ் ஐ

மெட்ராஸ் ஐ பாதிப்புடன் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirunelveli, India

  நெல்லை மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. சராசரியாக மருத்துவமனை ஒன்றுக்கு 100 முதல் 120 பேர் வரை மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  மழைக் காலங்களில் அதிகம் பரவும் நோய்களில் ஒன்று மெட்ராஸ் ஐ. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ கண்நோய் ஆகும். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தினால் பிறருக்கும் மெட்ராஸ் ஐ பரவக்கூடும்.

  தற்போது, தமிழகத்தில் அதிகளவில் மெட்ராஸ் ஐ பாதிப்புகள் பதிவாகியுள்ளது. திருநெல்வேலியில் சராசரியாக மருத்துவமனை ஒன்றுக்கு 100 முதல் 120 பேர் வரை மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பள்ளி சிறார்களே அதிகம்.

  இதையடுத்து, மெட்ராஸ் ஐ பாதிப்புடன் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆசிரியர்களுக்கும் மெட்ராஸ் ஐ அறிகுறி தென்பட்டால் கட்டாய விடுப்பெடுத்திக்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

  இதையும் படிக்க: எல்லா கடனையும் தள்ளுபடி செய்தால் எப்படி ஆட்சி நடத்துவது- கூட்டுறவு சங்க நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

  மேலும், மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் நேரில் சென்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களில் மட்டும் 800க்கும் மேற்பட்டோர் மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக நெல்லை மாநகர் பகுதியில் உள்ள மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

  செய்தியாளர்:ஐயப்பன் - நெல்லை

  Published by:Murugesh M
  First published:

  Tags: Madras Eye, Tirunelveli