ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

கல்யாணத்துக்கு மறுத்த மகள் கொலை.. ஹேர் டை விழுங்கி தாய் தற்கொலை முயற்சி - நெல்லையில் பரபரப்பு

கல்யாணத்துக்கு மறுத்த மகள் கொலை.. ஹேர் டை விழுங்கி தாய் தற்கொலை முயற்சி - நெல்லையில் பரபரப்பு

நெல்லை கொலை சம்பவம்

நெல்லை கொலை சம்பவம்

Tirunelveli News : கல்யாணத்துக்கு மறுத்த மகள் காதலனுடன் ஓடிவிடுவேன் எனக் கூறியதால் தாய் கொலை செய்த சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Tirunelveli, India

  திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலாமடை பகுதியைச் சேர்ந்தவர்கள் பேச்சி - ஆறுமுக கனி தம்பதியினர்.  இவர்களுக்கு 19 வயதில் அருணா என்ற மகள் உள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். டிரைவரான பேச்சி சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

  அருணாவுக்கு மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவரம் தெரியவரவே  அவருக்கு திருமண முயற்சி ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அறிந்த அருணா தனது காதல் விவகாரத்தை தாயிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஊருக்கு வா பேசிக்கலாம் என திருநெல்வேலிக்கு அழைத்துள்ளார்.

  கோவையில் இருந்து அருணா சொந்த ஊருக்கு வந்த நிலையில்  அவருக்கு அவர் சார்ந்த சமூகத்தை சேர்ந்த வேறூ ஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க தாய் ஆறுமக கனி முடிவு செய்துள்ளார். புதன்கிழமை அதாவது இன்று மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வருவதாக தகவல் அளித்துள்ளனர். இதனை அறிந்த அருணா தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். காதலனை தான் திருமணம் செய்துக்கொள்வேன் என சண்டையிட்டுள்ளார்.

  Also Read: படுத்த படுக்கையான தாய்... 2 வாரத்தில் திருமணம் நடைபெற இருந்தநிலையில் மகள் எடுத்த விபரீத முடிவு

  வேறு நபருக்கு திருமணம் செய்துகொடுக்க நினைத்தால் அந்த நபரிடமே என் காதலை கூறி காதலனுடன் சென்று விடுவதாக அருணா மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமக கனி மகள் என்று பாராமல் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். கொலை சம்பவம் வெளியே தெரிந்து தாம் மாட்டிக்கொள்வோம் என நினைத்த அவர் வீட்டில் இருந்த ஹேர் டை மற்றும்  மாத்திரைகளை விழுங்கியதாக தெரிகிறது.

  இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் ஆறுமக கனியை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த அருணாவின் உடலை கைப்பற்றி சீவலப்பேரி போலீஸார்  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: ஐயப்பன் ( திருநெல்வேலி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Local News, Love, Murder, Tamilnadu, Tirunelveli