ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

சுத்தியலால் அடித்து திருநங்கை கொலை... லாரி ஆசாமிகள் வெறிச்செயல்... நெல்லையில் பரபரப்பு!

சுத்தியலால் அடித்து திருநங்கை கொலை... லாரி ஆசாமிகள் வெறிச்செயல்... நெல்லையில் பரபரப்பு!

கொலையான திருநங்கை

கொலையான திருநங்கை

Tirunelveli News : நெல்லையில் திருநங்கை அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை பெருமாள்புரம் போலீசார் தேடி வருகின்றனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லை பேட்டை அடுத்த சுத்தமல்லி பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் பிரபு(35). திருநங்கையான இவர் நேற்று அதிகாலை பாளை ரெட்டியார்பட்டி மலை நான்கு வழிச்சாலையில் மயங்கி கிடந்தார்.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பிரபு கூறியதாவது, “நான் திருநங்கையாக மாறி யாசகம் எடுத்து பிழைத்து வருகிறேன். தினமும் சுத்தமல்லியில் இருந்து புறப்பட்டு நாங்குநேரி டோல்கேட் சென்று அங்கு வரும் வாகனங்களில் பணம் வசூல் செய்வேன்.

இதையும் படிங்க : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு : சூறைக்காற்று... கனமழை... வானிலை மையம் கொடுத்த புதிய அலெர்ட்

16ம் தேதி டோல்கேட் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது லாரியில் வந்த இரண்டு பேர் என்னை அழைத்தனர். நான் லாரியில்  ஏறி  இறங்கும்போது ரூபாய் 11 ஆயிரத்தை காணவில்லை. பணத்தை  எடுத்தால் கொடுத்து விடு என்று அவர்கள் என்னை மிரட்டி என்னை தாக்கினர்.

மேலும், நான் சத்தம் போட்டதால் அங்கிருந்து புறப்பட்டு ரெட்டியார் பட்டி மலையில் வைத்து வண்டியில் உள்ள சுத்தியலால் என் நெற்றியில் அடித்து ஊமைக்காயம் ஏற்படுத்தி இறக்கிவிட்டு சென்று விட்டனர். அவர்கள் யார் என்று எனக்கு தெரியாது” என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு திடீரென உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி மாலையில் பிரபு பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து போலீசார் இதை கொலை வழக்காக பதிவு செய்து லாரியில் வந்த இருவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : ஐயப்பன் - நெல்லை

First published:

Tags: Crime News, Local News, Tirunelveli