ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

தினமும் மது அருந்திவந்து தொல்லை... கணவனுக்கு விஷம் வைத்து கொன்ற மனைவி: நெல்லையில் பயங்கரம்..!

தினமும் மது அருந்திவந்து தொல்லை... கணவனுக்கு விஷம் வைத்து கொன்ற மனைவி: நெல்லையில் பயங்கரம்..!

கணவன் - மனைவி

கணவன் - மனைவி

தந்தை உயிரிழந்த நிலையிலும், தாய் சிறைக்கு சென்ற நிலையிலும் 3 குழந்தைகள் வீட்டில் தனியாக தவித்து வருகின்றன

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli | Tirunelveli

நெல்லையில் கணவனுக்கு விஷம் வைத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள குட்டத்தை அடுத்த குஞ்சன்விளை மெயின்ரோட்டை சேர்ந்தவர் சிங்காரவேலன்(40). கூலி தொழிலாளியான இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சிங்காரவேலன் சமீப காலமாக மது அருந்திவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல்  இருந்து வந்ததாகவும், போதையில் தினமும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிங்காரவேலனின் தாயார் மூக்கம்மாள் தனது மகன் வீட்டுக்கு சென்றபோது அங்கு சிங்காரவேலன் வாந்தி எடுத்து மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிங்காரவேலனின் உடலை வீட்டுக்கு கொண்டு சென்று குளிர்பதன பெட்டியில் வைத்து பாதுகாத்துள்ளனர்.  இதற்கிடையே தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுதொடர்பாக ஜெயக்கொடியிடம் விசாரிக்க வேண்டும் என்றும் உவரி போலீசில் மூக்கம்மாள் புகார் அளித்தார்.

அதன்பேரில் உவரி போலீசார் சிவகாரவேலன் உயிரிழப்பை, சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்ததோடு அவரின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிங்காரவேலனின் மனைவி ஜெயக்கொடியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறி உள்ளார்.

ALSO READ | சிங்கப்பூரிலிருந்து உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்தல்.. சிக்கியது எப்படி தெரியுமா?

உடனே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், சிங்காரவேலன் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் ஆத்திரத்தில் குருணை மருந்தை சாப்பாட்டில் கலந்து கொடுத்து அவரை கொலை செய்ததாக ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தையடுத்து போலீசார் ஜெயக்கொடியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தாயும், தந்தையும் இல்லாத நிலையில், 3 குழந்தைகளும் வீட்டில் தவித்து வருகின்றனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Crime News, Husband Wife, Murder, Nellai, Tirunelveli, Wife Attacks Husband