Home /News /tirunelveli /

கிருஷ்ண ஜெயந்தி.. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம்

கிருஷ்ண ஜெயந்தி.. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம்

கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு யாகம்

கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு யாகம்

Krishna jayanthi 2022 : திருநெல்வேலியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளில் பாடல் பாடி பொதுமக்கள் பிரார்த்தனை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India
    மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்திருக்கிறார் என்று நம்பப்படுகிறது. அதில் கிருஷ்ணர் அவதாரம் சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுகிறது. தேவகியின் கருவில் உதித்தது முதல் குழந்தையாய் மண்ணில் பிறப்பது வரை பல போராட்டங்களை சந்தித்து, அவர் பிறக்கும் முன்பே அவரை அழிக்க காத்திருந்த கம்சனையும் மீறி, ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய அஷ்டமி திதியில் அவரது அவதாரம் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான இந்த கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. இந்த கோவிலில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வண்ண அலங்கார பானை


    இங்கே, சாமிக்கு ஆயிரக்கணக்கான வண்ண அலங்கார பானைகள் தயார் செய்யப்பட்டு, அதில் அமுது படைக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டு இனிப்பு, முருக்கு உள்ளிட்டவை வைத்து பானைகளை கோயில்களில் ஆங்காங்கே அலங்காரமாக தொங்கு விடப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன.

    Must Read : சகோதரி அஸ்வினி குரல்.. திமுக ஆட்சிக்கு கொடுத்த சம்மட்டி அடி - அண்ணாமலை பேச்சு

    இந்தப் பானைகளை இன்று கிருஷ்ண ஜெயந்தியின் சிறப்பு பூஜைகள் முடிந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
    இதேபோல் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள இஸ்கான் கோவிலில் ராதை கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பாடல் பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    செய்தியாளர் - ஐயப்பன்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Krishna Jayanthi, Temple, Tirunelveli

    அடுத்த செய்தி