ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதை ரத்து செய்ய வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதை ரத்து செய்ய வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

கடந்த 2019 - 2020ஆம் ஆண்டு தகுதியற்றவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளதாக மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நடவடிக்கை..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

தகுதியற்றவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டிருந்தால், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் சமுத்திரம் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த 2019 - 2020ஆம் ஆண்டு தகுதியற்றவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், மகாதேவன் மற்றும் சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தகுதியற்றவர்களுக்கு விருது வழங்கப்பட்டதா, என்பதை கண்டறிய தமிழக இயல், இசை, நாடக மன்றம் சார்பில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதிகள், இந்த சம்பவ குறித்து சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் விருதை ரத்து செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

First published:

Tags: Madurai, Madurai High Court, Thirunelveli