Home /News /tirunelveli /

ஆயன்குளம் கிணறு போல் பல்வேறு அதிசய கிணறுகள்- நிலத்தடி நீரை உயர்த்துவதாக ஐஐடி குழு தகவல்

ஆயன்குளம் கிணறு போல் பல்வேறு அதிசய கிணறுகள்- நிலத்தடி நீரை உயர்த்துவதாக ஐஐடி குழு தகவல்

ஆயன்குளம் கிணறு

ஆயன்குளம் கிணறு

ஆயன்குளம்  கிணறு உண்மையில் ஒரு அதிசய கிணறுதான் என்பது தெரியவந்துள்ளது. இந்த கிணற்றில் கீழ் உள்ள பாதாள குகைகள் வழியாக தண்ணீர் அதிவேகமாக கடத்தப்படுகிறது. இந்த அதிசய கிணறு மூலமாக சுற்றிலும் ஆறு கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள கிணறுகளில்  நீர்மட்டம் உயர்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India
திசையன்விளை அதிசய கிணறு போல் சுற்றுவட்டார பகுதியில் மேலும் 10க்கும் மேற்பட்ட கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் இந்த கிணறுகள் அமைந்துள்ளதாக ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தான் மொழி பகுதியில் ஆயன்குளம் அதிசய கிணறு அமைந்துள்ளது.  கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை காலங்களில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கிணற்றுக்குள் சென்றது பல நாட்கள் தண்ணீர் சென்றும் கிளை நிரம்பவில்லை. நிரம்பவில்லை இதனையடுத்து இந்த கிணறு குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த 3 மாதங்களாக ஐஐடி குழுவினர் அதிசய கிணறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50 க்கும் கிணறுகளில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் கேமராக்கள் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். இதன் மூலம் பல்வேறு தகவல்களை பெற்றுள்ளனர்.

இந்த கிணறுகள், சுண்ணாம்பு பாறைகளை கொண்டுள்ளதாகவும், மழை நீரில் உள்ள ஆக்சிஜன் சுண்ணாம்பு பாறைகளில் வேதிவினை புரிந்து துவாரங்களை உருவாக்குவதாகவும் பேராசிரியர்கள் கூறுகின்றனர். துவாரங்கள் நாளடைவில் பெரிய குகைகளாக மாறுவதாகவும் கூறப்படுகிறது. பேராசிரியர் குழுவுடன் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோரும் ஆய்வு நடத்தினர்

தற்போதைய ஆய்வு சராசரியாக 50 முதல் 60 கன அடி தண்ணீரை உள்வாங்கும் திறன் கொண்டதாக இந்த அதிசய கிணறு இருப்பதாக தெரியவந்துள்ளதுமழைக்காலங்களில் வீணாகும் நீர், கிணறு வழியாக செல்லும் போது 6 கிலோமீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் எனவும் தெரியவந்துள்ளது.



பின்னர் ஐஐடி பேராசிரியர்கள் குழுவைச் சேர்ந்த பொறியாளர் வெங்கட்ராமன் சீனிவாசன் இந்த அதிசய கிணறு தொடர்பாக நடத்திய ஆய்வுகள் குறித்து கூறும் போது, “கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் இந்த கிணறு குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டோம். 300 கிணறுகள் வரை சர்வே செய்தோம். 160 கிணறுகள் வரை அதன் நீர் மற்றும் கிணற்றின் தரைப்பகுதியில் இருக்கும் மண் எடுத்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். ஆராய்ச்சிக்காக நீர் மூழ்கி கேமராவை பயன்படுத்தி சுண்ணாம்பு பாறைகளில் உள்ள துளைகளின் அளவுகளை படம் பிடித்துக் கொண்டோம்.

இதையும் படிங்க: பள்ளி மாணவியை கடத்த முயன்ற மர்மநபர்கள்.. அதிர்ச்சியில் ஷேர் ஆட்டோவில் இருந்து குதித்த மாணவி..! - பட்டப்பகலில் துணிகரம்

இதன் மூலம் ஆயன்குளம்  கிணறு உண்மையில் ஒரு அதிசய கிணறுதான் என்பது தெரியவந்துள்ளது. இந்த கிணற்றில் கீழ் உள்ள பாதாள குகைகள் வழியாக தண்ணீர் அதிவேகமாக கடத்தப்படுகிறது. இந்த அதிசய கிணறு மூலமாக சுற்றிலும் ஆறு கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள கிணறுகளில்  நீர்மட்டம் உயர்கிறது. இதே போன்ற கிணறுகள் அருகிலுள்ள கிராமங்களில் உள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். கீரைக்காரன்தட்டு, சுவிசேஷபுரம், சாத்தான்குளம் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வரை இதே போன்ற கிணறுகளை ஆய்வு செய்துள்ளோம்.



இது சிறிய அளவிலான ஆய்வு திட்டம் தான். கருமேனியாறு நீர்வழி பாதை அருகில் இந்த திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம்” என்று தெரிவித்தார். மேலும்,  விவசாய கிணறுகளில் சுண்ணாம்பு பாறைகளோ குகைகளோ கண்டுபிடிக்கப்பட்டால், அது குறித்து ஆய்வு குழுவினருக்கு தகவல்களை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 8925010683 என்ற வாட்ஸ் அப்  எண்ணுக்கு தகவல் அனுப்பினால் ஐஐடி ஆராய்ச்சி குழுவினர் இலவசமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கிணற்றின் நீர்மட்டத்தை உயர்த்த வழிவகை செய்வதாக தெரிவித்தார்.

 
Published by:Murugesh M
First published:

Tags: IIT Madras, Tirunelveli

அடுத்த செய்தி