இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த பயணம் தொடர்ந்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்து முன்னணி கலை இலக்கியப் பிரிவு ஒருங்கிணைப்பாளரும் சண்டை பயிற்சி இயக்குனருமான கனல் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காடேஸ்வரா சி. சுப்பிரமணியன் பேசும்போது, “ தமிழகத்தில் இந்துக்களின் உரிமை என்பது மீட்கப்பட வேண்டும். இந்துக்களின் உரிமைகளைப் தமிழக அரசு வழங்கவில்லை. இந்த அரசு நான்கு ஆண்டு நீடிக்குமா மூன்றாண்டுகள் நடக்குமா என்று சொல்ல முடியாது. மகாராஷ்டிராவில் நடைபெறுவது போல தமிழகத்தில் நடைபெறும். நேற்று மகாராஷ்டிரா முதல்வர் ராஜினாமா செய்து விட்டார்.
அதுபோல தமிழக முதல்வர் எப்போது ராஜினாமா செய்வார் என தெரியவில்லை. ஏற்கனவே எம்எல்ஏக்கள் ஒரு சிலரிடம் பேரம் பேசுவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் உளவுத்துறை மூலமாக வருகிறது. இந்துக்கள் விழிப்படைந்து விட்டார்கள். வருகின்ற 24 அல்லது 26 தேர்தல் ஆகட்டும் யார் இந்துக்களுக்கு ஆதரவு தருகிறார்களோ அவர்களுக்கு நல்ல காலம்” என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
Also see... வரிகள் தொடங்கி அபராதம் வரை.. ஜூலை 1 முதல் 6 முக்கிய மாற்றங்கள்! - கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க
இதைத்தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ”இந்துக்களின் உரிமை என்பது தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. அதற்காகதான் நாங்கள் இந்துக்களின் உரிமைகளை மீட்பதற்காக பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூல் காய்த்து அதை பெண்கள் விநியோகம் செய்வார்கள். இதற்கு தமிழக அரசு ஒவ்வொரு அம்மன் கோவில்களுக்கும் விலையில்லா அரிசி வழங்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் விழாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி நடைபெற்று வருவதாக அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து வருகிறார். அப்படி எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லை. நேற்று கூட வள்ளியூரில் கோயிலுக்குச் சென்றிருந்தேன் அங்கு கோவில்கள் பராமரிக்காமல் இருக்கிறது. தமிழகத்தில் கோவில்கள் பராமரிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் கோவில்களின் பணத்தை கொண்டு ஊழல் செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை உருக்கி அதில் மிகப்பெரிய மோசடி நடக்கிறது.
இதையெல்லாம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வங்கிகளில் கூட இந்துக்களுக்கு கடன் வழங்க மறுக்கப்படுகிறது. அப்படி வழங்கினாலும் அவர்களுக்கு அதிகமான வட்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த அரசுக்கு எதிராக இந்துக்கள் பேசினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காகதான் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்: ஐயப்பன், திருநெல்வேலி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Munnani, MK Stalin, Tirunelveli