முகப்பு /செய்தி /திருநெல்வேலி / ஒன்றாக வாழ மறுத்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்.. நெல்லையில் பகீர் சம்பவம்..

ஒன்றாக வாழ மறுத்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்.. நெல்லையில் பகீர் சம்பவம்..

கொலையானவர்

கொலையானவர்

Crime News : நெல்லையில் குடும்ப பிரச்சனையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு கணவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அடுத்த அத்திமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன், விவசாய கூலித்தொழிலாளியான இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணி செய்து வருகிறார். இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. இதனால் பேச்சியம்மாள் தனது மகள் வீட்டில் இருந்து விவசாய கூலித்தொழிலுக்கு சென்று வருகிறார். மேலும், முருகன் கடந்த சில நாட்களாக வேலைக்கு எதுவும் செல்லாமல் சுத்தமல்லி பகுதியில் உள்ள அவரது வீட்டில் மகனுடன் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று வேலைக்கு சென்று வீட்டில் தனியாக இருந்த பேச்சியம்மாளிடம் முருகன் தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி அழைத்துள்ளார். இதற்கு பேச்சியம்மாள் அவரிடம் செல்ல மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்துவந்து பேச்சியம்மாளை சரமாரியாக குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த பேச்சியம்மாள் மயங்கி விழுந்தார். இதைக்கண்டு முருகன் அங்கிருந்து தப்பியோடினார்.

சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து ரத்த வெள்ளத்தில் வீட்டில் கிடந்த பேச்சியமாளை மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சுத்தமல்லி போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து முருகனை தேடி வந்தனர். இதனிடையே, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பேச்சியம்மாள் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

செய்தியாளர் : ஐயப்பன்(நெல்லை)

First published:

Tags: Local News, Tirunelveli