ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

நோட்டு புத்தக பிரச்னை.. ப்ளஸ் 2 மாணவனுக்கு கத்திக்குத்து.. நெல்லையில் பரபரப்பு!

நோட்டு புத்தக பிரச்னை.. ப்ளஸ் 2 மாணவனுக்கு கத்திக்குத்து.. நெல்லையில் பரபரப்பு!

அரசு பள்ளி மாணவர்கள் மோதல்

அரசு பள்ளி மாணவர்கள் மோதல்

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கு கத்திக்குத்து. காயம் அடைந்த மாணவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்கவும் ...
  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள்  பயின்று வருகின்றனர். இதில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவர்களிடையே பள்ளி நோட்டு புத்தகம் கையாள்வதில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதனிடையே ஒரு வாரத்திற்கு முன்னர் இசை செல்வனை மாணவர் (சிவசங்கர்) தாக்கியதாக தெரிகிறது.

சிவசங்கரை கண்டித்த பள்ளி நிர்வாகம்  பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே வகுப்பிற்குள் அனுமதிக்க முடியும் என தெரிவித்துள்ளனர். அவர் அழைத்து வராததால் கடந்த ஒரு வரமாக வகுப்பறைக்கு வெளியே  நின்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது இந்த நிலைக்கு இசைச்செல்வனே காரணம் என நினைத்து  அவரிடம் சிவசங்கல் தகராறு செய்துள்ளார்.

Also see... யார் தீபம் முதலில்? ஓபிஎஸ் மகன் - திமுகவினர் வாக்குவாதம்.. கார்த்திகை தீபத்திருவிழாவில் பரபரப்பு!

வாய் தகராறு முற்றவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இசைச்செல்வனை அந்த மாணவர் கத்தியால்  குத்தியதாக தெரிகிறது. இதில் இசைச்செல்வன் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மீட்ட ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள்  அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கத்தியால் குத்திய மாணவரை பிடித்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இருவரும் 18 வயதிற்கு வயதிற்கு குறைந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: செல்வமணி, திருநெல்வேலி

First published:

Tags: Attempt murder case, Government school, School student, Tirunelveli