Home /News /tirunelveli /

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு அஞ்சல் தலையை வௌியிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு அஞ்சல் தலையை வௌியிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம்.

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம்.

Tirunelveli | சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் நினைவு அஞ்சல் தலையை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். அதனை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பெற்றுக் கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India
    சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று அவரது 251-வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள அவரது மணி மண்டபத்தில் அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய இணை அமைச்சர்கள் நாராயணசாமி எல்.முருகன் ஆகியோர் மணி மண்டபத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    Also see... கிருஷ்ண ஜெயந்தி விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு கௌரவம்

    தொடர்ந்து கேடிசி நகர் தனியார் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியிட்டு விழாவில் ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். வழக்கமாக ஆண்டுதோறும் ஒண்டிவீரன் நினைவு தினத்தில் பாஜக சார்பில் கட்சி நிர்வாகிகள் மட்டுமே அஞ்சலி செலுத்துவார்கள். ஆனால் இந்த முறை மத்திய அரசு ஒண்டிவீரன் நினைவு தினத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இரண்டு மாநில ஆளுநர்கள் இரண்டு மத்திய அமைச்சர்களை நெல்லைக்கு அனுப்பியதுடன் அவரது அஞ்சல் தலை வெளியிட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் நினைவு அஞ்சல் தலையை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். அதனை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பெற்றுக் கொண்டார்.

    இதற்கிடையில் ஆளுநர்கள் மத்திய அமைச்சர்கள் மாநில அமைச்சர்கள் போன்றோர் வருகை தந்ததால் ஒண்டிவீரன் மணிமண்டபத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    செய்தியாளர்: ஐயப்பன், நெல்லை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Nellai, RN Ravi, Tamilisai Soundararajan, Tirunelveli

    அடுத்த செய்தி