ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

எங்கள் கஷ்டப்படுத்தாதீங்க.. விவசாய வேலைக்கு பாட்டில்ல பெட்ரோல் கொடுங்க - விவசாயிகள் கோரிக்கை

எங்கள் கஷ்டப்படுத்தாதீங்க.. விவசாய வேலைக்கு பாட்டில்ல பெட்ரோல் கொடுங்க - விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

Tirunelveli |விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மோட்டார்களுக்கு பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirunelveli, India

  தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். அதனை தொடர்ந்து அந்த உத்தரவு தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

  இந்த நிலையில் விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மருந்து தெளிக்கும் மோட்டார்கள், டீசல் இன்ஜின்கள் போன்றவற்றிற்கு பெட்ரோல், டீசல் வாங்குவது மிகவும் சிரமமான காரியமாய் மாறி உள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழக விவசாய பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

  இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் அளித்த மனுவில் விவசாய பணிகள் நடைபெறும் பகுதியில் இருந்து பெட்ரோல் பங்க் செல்வதற்கு சுமார் 5 லிருந்து 10 கிலோமீட்டர் தொலைவு உள்ளதாகவும் மருந்து அடிக்கும் இயந்திரத்தை கொண்டு சென்று பெட்ரோல் வாங்கும் நிலை தற்போது உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .

  சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை மருந்து அடிக்கும் இயந்திரத்தை டிராக்டர் மூலம் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ள சூழலால் டிராக்டருக்கும் டீசல் போன்ற செலவுகள் இருப்பதால் விவசாய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

  விவசாயிகள் போராட்டம்

  Also see... போலீஸ் ஸ்டேஷன் தான் போறேன்.. மனைவியை கொலை செய்துவிட்டு கத்தியுடன் சென்ற கணவன் - சிசிடிவி காட்சிகள்

  இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விவசாய பணிக்கான தேவைகளுக்கு பெட்ரோல் டீசல் ஆகியவை உழவர் அட்டைகளை காட்டினால் கேன்களில் வழங்க ஏற்பாடு செய்யவும் என அந்த மனு மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.

  செய்தியாளர்: ஐயப்பன், நெல்லை

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Farmers, Petrol-diesel, Tirunelveli