தென் மாநிலங்களின் பிரபல விழாக்களில் ஒன்றான நவராத்திரி தசரா விழா கா்நாடக மாநிலம் மைசூர், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திற்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தசரா விழா கடந்த 25ம் தேதி ஆயிரத்தம்மன் கோயிலில் கொடி ஏற்றம் நடைபெற்றதை தொடர்ந்து நெல்லையில் உள்ள அம்மன் கோயில்களில் தசரா பண்டிகை தொடங்கியது.
பாளைங்கோட்டையில் அருள்பாலிக்கும் ஆயிரத்தம்மன், பேராத்து செல்வி அம்மன் முத்தாரம்மன் தூத்துவாரி அம்மன், உச்சினிமாகாளி அம்மன் உலகம்மன், முப்பிடாதி அம்மன் என 12 திருக்கோவில்களிலும் கடந்த 9 நாட்களும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனா்.
10ம் திருநாளான விஜயதசமியையொட்டி மகிஷாசூரவதம் செய்வதற்காக மின்னொளியில் சிம்ம வாகனத்தில் சா்வஅலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. சப்பரங்கள் 8 ரதவீதிகள் வழியாக உலா வந்து எருமைகிடா மைதானத்தை வந்தடைந்தது.
12 சப்பரங்களும் ஒன்றாக அணிவகுத்து நிற்க மகிஷாசூர சம்ஹார நிகழ்வு நடைபெற்றது. மகிஷன் 12 அம்பாளையும் சுற்றி வந்தததும் அனைத்து அம்மனுக்கும் தலைவியான ஆயிரத்தம்மன் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட சுலாயுதத்தால் தலையை வெட்டினாா்.
Also see...தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் சென்னை-தி.நகரில் போக்குவரத்து மாற்றம்
தொடா்நது மகிஷ முகம் கொண்டு ஆக்ரோஷத்துடன் போா் புாியவர அம்பாள் கோபத்துடன் மகிஷனை சம்ஹாரம் செய்தாா். மகிஷ வதம் முடிந்ததும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. நாளை தாமிரபரணி ஆற்றில் தீா்த்தவாாி நடைபெறும். தசரா விரதமிருந்த பக்தா்கள் இந் நிகழ்ச்சியினை நேரடியாக கண்டு மகிழ்ந்தனா்.
செய்தியாளர்: ஐயப்பன், நெல்லை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dussera, Navarathri, Nellai