ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

“சமையல் செய்யக் கற்றுக்கொள்”.. கண்டித்த தாய்.. திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு..!

“சமையல் செய்யக் கற்றுக்கொள்”.. கண்டித்த தாய்.. திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு..!

உயிரிழந்த கிறிஸ்டில்லா மேரி

உயிரிழந்த கிறிஸ்டில்லா மேரி

பிப்ரவரி 1ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில், புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

'சமையல் செய்ய கற்றுக்கொள்' என்று தாய் கூறியதால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கீழகோடன்குளத்தைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மகள் கிறிஸ்டில்லா மேரி (வயது 19). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பிப்ரவரி  1ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதற்கான வேலைகளில் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கிறின்டில்லா மேரி அடிக்கடி செல்போன் பார்த்துக்கொண்டு வீட்டு வேலை எதுவும் செய்யாமல் இருந்து வந்துள்ளார்.

இதை பார்த்த இவரது தாயார், ‘உனக்கு திருமணம் நடக்க உள்ளது. அதற்குள் சமையல் வேலைகளை கற்றுக்கொள்’ என்று கிறிஸ்டில்லா மேரியை அவ்வப்போது கண்டித்துள்ளார். இதனால் வேதனை அடைந்த கிறிஸ்டில்லா மேரி, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருத்தை குடித்து மயங்கினார்.

வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் கிறிஸ்டில்லா மேரி மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிறிஸ்டில்லா மேரி பரிதாமாக உயிரிழந்தார்.

திருமணமாகவுள்ள நிலையில் இளம்பெண் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Tirunelveli