முகப்பு /செய்தி /திருநெல்வேலி / மாணவியை காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றிய மத குரு கைது...

மாணவியை காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றிய மத குரு கைது...

மதகுரு கைது

மதகுரு கைது

பாளையில் மாணவியை காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றிய சிஎஸ்ஐ மத குருவை போலீசார் கைது செய்தனர்.

  • Last Updated :

பாளை ஆயுதப்படை அருகே கோரிப்பள்ளம் அன்பகத்தைச் சேர்ந்தவர் இன்பராஜ் மகன் மில்டன் கனகராஜ் (26). இவர் பி.எஸ்.சி கல்லூரி படிப்பை முடித்து விட்டு கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் பி.டி படித்துள்ளார். இதைத்தொடர்ந்து நெல்லை சி.எஸ்.ஐ திருமண்டலத்தின் கீழ் உள்ள கே.டி.சி நகர் கிறிஸ்டியா நகர் ஆலயத்தில் பயிற்சி மதகுருவாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அவர்களது வீட்டின் அருகே வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் சிறு குழந்தை முதல் மில்டன் குடும்பத்துடன் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். தற்போது அந்த கல்லூரி மாணவியின் குடும்பம் கிறிஸ்டியா நகர் ஆலயம் அருகே உள்ளது. அங்கு மில்டன் பணியில் சேர்ந்தது முதல் இருவரும் மீண்டும் நெருங்கி பழகி உள்ளனர்.

அப்போது மில்டன் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் செல்போன் ஒன்றும் மில்டன் மாணவிக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். இதனிடையே மில்டனின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து பெண் பார்த்துள்ளனர்.

இதனை அறிந்த மாணவி மில்டனிடம் வேறு பெண்ணை திருமணம் செய்வது குறித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மில்டன் மாணவி மற்றும் அவரது பெற்றோரை அவதூறாக பேசி குடும்பத்துடன் எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். பின்னர் இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

Also see... 17 வயது நிரம்பினாலே இனி வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்காலம்

அவர்களது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மதகுரு மில்டனை கைது செய்தனர். மதகுரு கைதான சம்பவம் அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: ஐயப்பசாமி, நெல்லை

First published:

Tags: Crime News, Love, Thirunelveli