Home /News /tirunelveli /

பள்ளி மாணவிகளை தரக்குறைவாக பேசும் நடத்துனர்கள்..? நெல்லை ஆட்சியரிடம் நடவடிக்கை கோரி மனு

பள்ளி மாணவிகளை தரக்குறைவாக பேசும் நடத்துனர்கள்..? நெல்லை ஆட்சியரிடம் நடவடிக்கை கோரி மனு

திருநெல்வேலி

திருநெல்வேலி

Tirunelveli School Students : பள்ளி மாணவிகளிடம் தரக்குறைவாக பேசும் அரசு பேருந்து நடத்துனர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பள்ளி மாணவிகள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India
    திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அடுத்த நொச்சிக்குளம் கிராமத்தில் இருந்து  நெல்லை சந்திப்புக்கு வழக்கம் போல் மூன்று அரசு பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசும் அரசு பேருந்து நடத்துனர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி  பள்ளி மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

    நெல்லை மாவட்டத்தின் பாளையங்கோட்டை, தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப்படுகிறது. இங்கு அதிகமான அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுகின்றன. இங்குள்ள பள்ளிகளில் படிப்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் நாள்தோறும் காலை முதல் பேருந்தில் வர தொடங்குகின்றனர்.  பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளி சீருடை அணிந்து இருந்தால் போதும் அரசு பேருந்தில் இலவசமாக பள்ளிக்கு பயணம் செய்யலாம்.

    இவ்வாறு திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள நொச்சிகுளம் கிராமத்திலிருந்து பாளையங்கோட்டையில் செயல்படும் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் அதிகாலை முதலே புறப்பட்டு வரத் தொடங்குகின்றனர்.

    நொச்சிகுளம் அடுத்த சமத்துவபுரம் பகுதியில் இருந்து கிருஷ்ணாபுரம், ஆரோக்கியாநாதபுரம், வி.எம்.சத்திரம் பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பாளையங்கோட்டை வரை பேருந்து இயக்கப்படும். முன்பு இந்த வழித்தடத்தில் காலை 9 மணிக்குள் மூன்று பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

    ஆனால், தற்போது ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு பேருந்து நடத்துனர்கள் மாணவிகளை மரியாதை குறைவாக நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது குறித்து வேலைக்கு செல்லும் பெண்கள் கூறும் போது, “நாங்கள் தாமதமாக சென்றால் கூட பரவாயில்லை. காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு உரிய நேரத்தில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். பேருந்து சேவை குறைக்கப்பட்டதால், மாணவ-மாணவிகள் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கிச் செல்லும் நிலை ஏற்படுகிறது” என்று கூறுகின்றனர்.

    Must Read : ரூ.5 கோடி மோசடி : சொகுசு கார்களுடன் தொழிலதிபரை கடத்திய காவலர், இன்ஜினியர் அடங்கிய கும்பல்..

    இந்நிலையில், இந்த பிரச்சனையை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து, காலை பள்ளி செல்லும் நேரங்களில் வழக்கம் போல் மூன்று பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். தரக்குறைவாக பேசும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

    செய்தியாளர் - ஐயப்பன்.
    Published by:Suresh V
    First published:

    Tags: School student, Tirunelveli

    அடுத்த செய்தி