தென்காசியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக ரயில் பயணம் மேற்கொள்கிறார்.
முதலமைச்சராக பதவியேற்றபிறகு, முதல்முறையாக தென்காசி மாவட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளார். பல்வேறு மாவட்டங்களுக்கும் விமானம் மூலம் சென்ற மு.க.ஸ்டாலின், முதல்முறையாக ரயில் மூலம் பயணிக்கிறார். இதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து இன்று இரவு 8.40 மணிக்கு புறப்படும் பொதிகை விரைவு ரயிலில் செல்கிறார்.
குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் நாளை காலை சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர், அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் மதுரை சென்று இரவு தங்குகிறார்.
நாளை மறுதினம் காலையில் அங்கு மாநகராட்சி வளைவு மற்றும் அம்பேத்கர் சிலையை திறந்துவைக்கிறார். பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
Also see... இன்று மாலை மாண்டஸ் புயல்.. ரெட் அலெர்ட்.. அதிகனமழைக்கான எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!
இந்நிலையில் முதல்வர் பயணிக்கக்கூடிய சாலைகள், கணக்குபிள்ளை வலசை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மேடை, பந்தல் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Tenkasi