ஹோம் /நியூஸ் /Tirunelveli /

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் சரி... திறமை மிக்கவர் வரவேண்டும் - நயினார் நாகேந்திரன்

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் சரி... திறமை மிக்கவர் வரவேண்டும் - நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Thirunelveli : அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் சரி அக்கட்சியின் தலைமைக்கு திறமை மிக்க ஒருவர் வரவேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக ஆதரவளிக்கும் வகையில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அதிமுகவிறகு ஒற்றை தலைமை தான் சரி எனவும் அதிமுக விதிகளின்படி சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் எம்ஜிஆர் காலத்திலிருந்தே சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்றும் பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் சங்கர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற குழு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இளவயதிலேயே பல்வேறு உலக சாதனைகள், 3 டாக்டர் பட்டம் யோகா ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் புரிந்த ப்ரிஷா என்ற மாணவி 20 க்கும் மேற்பட்ட யோகா சாகசங்கள் செய்து காட்டினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டமன்ற குழு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், ‘ 63 கலைகளும் உருவான நாடு பாரத நாடு. சுவாமி விவேகானந்தர் வாக்கு இப்போது நடந்து வருகிறது. உலக நாடுகளில் எங்கும் இல்லாத பெருமை இந்திய நாட்டுக்கு இருக்கிறது.

கலாச்சாரம் பண்பாடு உள்ளிட்டவைகளின் காரணமாக இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்க்கின்றன. உலகத்தின் அனைத்து பிரதமர்களின் யோகா குருவாக பாரத பிரதமர் மோடி திகழ்ந்துவருகிறார் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சி நாட்டுமக்களுக்கு நன்மை செய்யும் கட்சி இல்லை. காங்கிரஸ் கட்சி கழுதை தேர்ந்து கட்டெரும்பாகி, அக்கட்சி இல்லாமல் போய்விட்டது. திமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் தமிழகத்திலும் காங்கிரஸ் இல்லாமல் போயிருக்கும் என்றார்.

மேலும், ‘பிரதமரின் அற்புதமான திட்டம் அக்னிபத். 10 மற்றும் 12 ம் வகுப்பு முடித்தவர்கள் 30 ஆயிரம் மாதம் சம்பளம் என்ற அற்புதமான திட்டம் உலகில் எங்கும் இல்லை. அக்னிபத் திட்டத்திற்கு எதிராக அகில இந்திய அளவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மக்களை தூண்டி விடுகின்றன. தமிழகத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக மக்களை மறைவில் இருந்து திமுக தூண்டுகிறது எனவும் குற்றம் சாட்டினார்.

அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம் என தெரிவித்த அவர்,’ ஏழை எளிய மக்களுக்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சி. கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் தொண்டர்களின் மனநிலைக்கேற்ப நல்ல தலைவராக வர வேண்டும். இரண்டில் ஒருவர் யார் நல்லவரோ அவர் வரவேண்டும், தகுதியானவர் வரவேண்டும்.

அதிமுக கட்சியின் விதி 20 பி படி அனைத்து சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்ள வேண்டும். நகர பஞ்சாயத்து செயலாளர் தொடங்கி பல உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர். காலம் முதல் பொதுக் குழுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவுக்கு திறமை மிக்க ஒரு தலைமை வேண்டும். ஒற்றை தலைமை தான் சரி’ என கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிமுகவில் பல ஆண்டுகாலம் பயணித்து அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்த நயினார் நாகேந்திரன் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராகவும் உள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஒற்றை தலைமை கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒற்றை தலைமையை விரும்பவில்லை. அவர் இரட்டை தலைமை தொடர வேண்டும் என கருத்து தெரிவித்து வருகிறார்.

Must Read : அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும் நான் முன்னின்று காப்பேன் - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிச்சாமிக்கு அக்கட்சியின் இளைஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள்-இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அக்கட்சியிலிருந்து வெளியேறி தற்போது பாஜக-வில் உள்ள நயினார் நாகேந்திரன் ஒற்றை தலைமை தான் சரி என கூறியிருப்பதன் மூலம் அவர் மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவே பார்க்கப்படுகிறது.

Published by:Suresh V
First published:

Tags: ADMK, BJP, Edappadi Palaniswami, EPS, Nainar Nagendran, OPS, Thirunelveli, Yoga day