ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

“இது எங்க தேர்தல் இல்லை... அதிமுகவை ஆதரிக்கிறோமா இல்லையானு 2 நாள்ல சொல்றோம்..” அண்ணாமலை பேச்சு

“இது எங்க தேர்தல் இல்லை... அதிமுகவை ஆதரிக்கிறோமா இல்லையானு 2 நாள்ல சொல்றோம்..” அண்ணாமலை பேச்சு

அண்ணாமலை

அண்ணாமலை

2026ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் - அண்ணாமலை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

திமுகவின் 20 மாத ஆட்சி எப்படி இருந்தது என்பதற்கு உதாரணம்தான் பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று தனது உதவியாளர் மீது சேர் எறிந்த செயல்பாடு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள மாற்று கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு கட்சியில் இணையும் விழா பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது அண்ணாமலை பேசியதாவது: -  “ஈரோடு இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் வேட்பாளரை அறிவித்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னே அமைச்சர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அம்மாவாசை அன்று நல்ல நாள் பார்த்து திமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். ஏனென்றால் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அமைச்சர்கள் படை பரிவாரத்தோடு சென்று வாக்கு சேகரிக்கின்றனர். இது விசித்திரமான தேர்தலாக உள்ளது” என கூறினார்.

“பாஜக அதிமுக கூட்டணியில், அதிமுக பலமான கட்சியாக உள்ளது. பல வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளை பிரிக்கவேண்டாம். கூட்டணியினர் ஒன்றிணைந்து முன் நிற்க வேண்டும். இந்த தேர்தலில் பாஜக போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இடைத்தேர்தலில் பண பலம், படை பலம், அதிகார துஷ்பிரயோகம்தான் வெற்றி பெறும். இந்த தேர்தல் பாஜகவிற்கான தேர்தல் அல்ல. எங்களுக்கான தேர்தலில் எங்கள் பணி சிறப்பாக இருக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவில் பலமான முன்னாள் அமைச்சர்கள் உள்ளனர். அதிமுகவை ஆதரிப்பது குறித்து 2 நாட்களில் முடிவு செய்யப்படும்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்றத்தில் சேது சமுத்திர திட்டம் தொடர்பாக பேசிய நிலையில் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒரே ஒரு நாள் சேது சமுத்திர திட்டம் குறித்த தீர்மானம் கொண்டு வந்த பின்னர் அதைக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திமுகவின் திட்டங்கள் எதுவும் திடமானதாக இல்லை” என குற்றம்சாட்டினார்.

“அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் நினைப்பதாக தெரிவித்த ஓபிஎஸ் கருத்துக்கு காலம் வரும் போது பதில் சொல்வேன். தேர்தல் ஆணையம் என்னதான் கண்காணிப்பு குழு அமைத்தாலும்  அமைச்சர்கள் 20 மாதங்கள் சம்பாதித்த பணம் வெளியே வரத்தான் செய்யும் நீங்களும் பார்ப்பீர்கள்.

தேர்தல் அறிக்கையில் கூறியபடி திமுக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. திமுகவின் 20 மாத ஆட்சி எப்படி இருந்தது என்பதற்கு உதாரணம்தான் பால்வளத்துறை அமைச்சர் நாசரின் செயல்பாடு. உட்கார சேர் கேட்டு தனது உதவியாளர் மீது கல்லை எறிந்தது இன்று ஊடகம் மூலம் இந்தியா முழுக்க அது தெரிய வந்துள்ளது” என தெரிவித்தார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் அழைத்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தை கட்சி தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, “கடந்த முறை சொன்னதையே இப்போதும் கூறுகிறேன். டீ செலவு மிச்சம்” என கூறினார். மேலும் 2026ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் எனவும் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பு நிறைவு பெற்ற நிலையில் எதிர்க்கட்சிகள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக செங்கலை வைத்து போராட்டம் நடத்தி வருவது தொடர்பாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் வெறும் செங்கலை வைத்து கட்டிடம் கட்ட முடியாது சிமெண்டையும் சேர்த்து வைத்து போராட்டம் நடத்தட்டும் என சிரித்தவாறு சொல்லி சென்றார்.

First published:

Tags: ADMK, Annamalai, BJP, Erode Bypoll, Erode East Constituency