Home /News /tirunelveli /

அண்ணாமலை பிறந்த நாள்: இலவசமாக ஆட்டோ ஓட்டும் முன்னாள் ரஜினி ரசிகர்

அண்ணாமலை பிறந்த நாள்: இலவசமாக ஆட்டோ ஓட்டும் முன்னாள் ரஜினி ரசிகர்

இலவச ஆட்டோ சேவை

இலவச ஆட்டோ சேவை

ரஜினி அரசியலுக்கு வராததால் வெறுப்பு அடைந்த ரஜினி முருகன், பின்னர் அண்ணாமலையின் ரசிகராக மாறிப்போனார். அவர் பெயரில் அண்ணாமலை மக்கள் மன்றம் என்ற ஒரு இயக்கத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளையொட்டி நெல்லையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இன்று இலவசமாக சவாரி வழங்கி வருகிறார். அரசியலுக்கு ரஜினி வராததால் அண்ணாமலை பின் நிற்பதாக அவர் தெரிவித்துள்ளனர்.

    கர்நாடக மாநிலத்தில்  ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி தற்போது  பாஜக மாநிலத் தலைவராக உள்ள  அண்ணாமலை அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறார்.  ஐபிஎஸ் பதவியை துறந்தவுடன் அவருக்கு பாஜகவில்  முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது மூத்த  பாஜக நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.  அவர்  அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகினாலும் கூட ஒரு இளம் நேர்மையான  அதிகாரியின் அரசியல்  என்ற கோணத்தில்  ஏராளமான  இளைஞர்கள் அண்ணாமலை மீது பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர் .

    அண்ணாமலை பிறந்தநாளை பாஜகவினர் தமிழகம் முழுவதும்  இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த  நிலையில்  நெல்லையில் அண்ணாமலை ரசிகரான ஆட்டோ ஓட்டுநர் ரஜினி முருகன் தனது ஆட்டோவில் இன்று ஒருநாள் இலவச சேவையை மக்களுக்கு   வழங்கி தனது தலைவன் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினி முருகன் ஏற்கனவே திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வெறிபிடித்த ரசிகராக இருந்தவர் .

    ரஜினி மீதான  தனது பற்றை  வெளிப்படுத்தும் வகையில் தனது பெயருக்கு முன்னால் ரஜினி பெயரை சேர்த்துக் கொண்டார். சுமார் 20 ஆண்டுகளாக அவரது ரசிகராக இருந்த நிலையில் சக ரசிகர்களை போல் ரஜினியின் அரசியல் வருகையை பெரிதும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தார். தனது அரசியல் வாழ்க்கைக்கு ரஜினிகாந்த் நிரந்தரமாக முழுக்கு போட்டதையடுத்து அவர் மீது ஏற்பட்ட வெறுப்பால் ஆட்டோ ஓட்டுனர் ரஜினி முருகன் அவரது ரசிகராக தொடர்ந்து நீடிக்க விரும்பாமல் ஐபிஎஸ் பதவியை துறந்துவிட்டு அரசியலில் நுழைந்த அண்ணாமலையின் ரசிகராக மாறினார்.
    இதை படிக்க: பாலியல் வன்கொடுமை செய்து 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை: 2 மருத்துவமனைகளுக்கு சம்மன்
    அதன்படி அண்ணாமலை மக்கள் மன்றம் என்ற ஒரு இயக்கத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்.  தொடர்ந்து இன்று அண்ணாமலையின் பிறந்த நாளன்று தனது தலைவனுக்கு நூதன முறையில் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக ஆட்டோவில் பயணிகளை ஏற்றி சென்றார்.  இதுகுறித்து ரஜினி முருகன் கூறுகையில்,  ‘அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இலவசமாக ஆட்டோ ஓட்டுகிறேன். மக்களுக்காக தொண்டு செய்கிறவர் பின்னால் என்றும் நிற்பேன். ரஜினி வருவார் என எதிர்பார்த்தேன் வரவில்லை அண்ணாமலை தன் வாழ்க்கையை அர்ப்பணித்து மக்களுக்காக வருவதால் அவர் பின்னாடி நிற்கிறேன்’ என தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Annamalai, Auto Driver

    அடுத்த செய்தி