ஹோம் /நியூஸ் /Tirunelveli /

கடனுக்கு சரக்கு தராததால் டாஸ்மாக் விற்பனையாளரை மதுபாட்டிலால் தாக்கிய குடிமகன்

கடனுக்கு சரக்கு தராததால் டாஸ்மாக் விற்பனையாளரை மதுபாட்டிலால் தாக்கிய குடிமகன்

டாஸ்மாக்

டாஸ்மாக்

Tasmac : மதுபாட்டில் கடன் கொடுக்காத டாஸ்மாக் விற்பனையாளர் மீது தாக்குதல், படுகாயம் அடைந்த விற்பனையாளர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருநெல்வேலி பாளையங்கோட்டையில்  மதுபாட்டிலை கடன் கொடுக்காத டாஸ்மாக் விற்பனையாளர் மீது, ஆத்திரத்தில் மது பாட்டிலால் தாக்கிய மர்ம நபர் குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்த விற்பனையாளர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள ஏ.ஆர்.லைன் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் வயது 46. இவர் மகாராஜா நகர் உழவர் சந்தை அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக பணி புரிகிறார். நேற்று (12.06.22) இரவு 9 மணி அளவில் 4 மது பாட்டிலை வாங்கிய நபர் அதற்கு பணம் கொடுக்காமல் கடன் கேட்டதாக சொல்லப்படுகிறது.

அப்போது, விற்பனையாளர் கடன் கொடுக்க மறுத்த பாட்டிலை எடுத்து கடைக்குள் வைத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 2000 ரூபாய் பணத்தை கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிய அந்த நபர், விற்பனையாளரின் செல்போனையும் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

செல் போனை திரும்பப்பெற விற்பனையாளர் கடைக்கு வெளியே வந்து அந்த  நபருக்கு பின்னே சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த மர்மநபர் பாட்டிலால் விற்பனையாளரை தாக்கியுள்ளார். இதில் அவர் மண்டை உடைந்துள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். இதைப் பார்த்து, அருகிலிருந்தவர்கள் விற்பனையாளர் ஜெயக்குமாரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிகிச்சை பெறும் விற்பனையாளர்

அவருக்கு தலை மற்றும் காது பகுதியில் பத்து தையல்கள் போடப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து பெருமாள்புரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Must Read : விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது இரண்டு முறை ஏறி இறங்கிய கார் - பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

போதை ஏற்றுவதற்காக மது பாட்டிலை கடன் கேட்ட நிலையில், கடன் கொடுக்காத விற்பனையாளர் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Crime News, Tasmac, Thirunelveli