ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி பதினெட்டாம் பெருக்கென்று சப்த கன்னிகளை வணங்கி வழிபட்டால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம். அதேபோல ஆடி பதினெட்டாம் பெருக்கு என்று காவேரி, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட நதிகளையும் தமிழக மக்கள் பல நூற்றாண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக ஓடும் தாமிரபரணி நதிக்கரையில் ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று புதுமண தம்பதிகள் வழிபடுவது வழக்கம்.
ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று 18 வகையான நெய்வேத்தியங்கள் படைத்து புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி தாலி பிரித்துக்கட்டும் வைபவம் நடத்தப்படுவது காலம் காலமாக செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு இன்றைய தினம் கொண்டாடப்படும் நிலையில் நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி நதிக்கரையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் படித்துறையில் திரளான பெண்கள் காவேரி அம்மனுக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர்.
Also see... தாலி கயிற்றை மாற்ற வேண்டிய நாட்கள் எது? எந்த நேரத்தில் மற்றலாம்?
அதனை தொடர்ந்து புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் தாலி பிரித்து கட்டும் சடங்குகள் செய்து தாமிரபரணி அன்னையை வழிபட்டனர்.
செய்தியாளர்: ஐயப்பன், திருநெல்வேலி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadi, Newly married couple, Thirunelveli