Home /News /tirunelveli /

நெல்லையில் இளைஞர் நடுரோட்டில் ஓடஓட விரட்டி வெட்டி கொலை.. பழிக்குப்பழியாக நடந்த கொலையா?

நெல்லையில் இளைஞர் நடுரோட்டில் ஓடஓட விரட்டி வெட்டி கொலை.. பழிக்குப்பழியாக நடந்த கொலையா?

நெல்லையில் இளைஞர் நடுரோட்டில் ஓடஓட விரட்டி வெட்டி கொலை

நெல்லையில் இளைஞர் நடுரோட்டில் ஓடஓட விரட்டி வெட்டி கொலை

கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த கொலை சம்பவத்தில் ஒன்பதாவது குற்றவாளியாக பேச்சிராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tirunelveli
    திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் அடுத்த பால் கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதான பேச்சிராஜன். இவருக்கு திருமணம் ஆகி 3 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கூலி தொழிலாளியான இவர் வேலை நிமித்தமாக தனது கிராமத்திலிருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    தச்சநல்லூர் பைபாஸ் சாலை பிரிவில் இரண்டு பைக்கில் வந்த மூன்று பேர் பேச்சிராஜனை வழிமறித்தனர். கொலை செய்ய வந்திருப்பதை அறிந்த பேச்சிராஜன் அவர்களிடம் இருந்து தப்பிக்க பைக்கை போட்டுவிட்டு ஓடினார். ஆனால் கொலைகார கும்பல் அவரை ஓடஓட விரட்டி வெட்டியது.

    தலை, முதுகில் வெட்டு விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்துவிட்டு அந்த கும்பல் இங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    தகவல் அறிந்து வந்த உறவினர்கள் நண்பர்கள் வண்ணாரப்பேட்டையில் கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடலை எடுக்க விடாமல் அவர்கள் போராட்டம் நடத்தியதால் திருநெல்வேலி - மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை ஆணையர் அவிநாஷ் குமார், துணை ஆணையர் சீனிவாசன் ஆகியோர் உறவினர்கள் இடமிருந்து உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பேச்சிராஜன் குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த கொலை சம்பவத்தில் ஒன்பதாவது குற்றவாளியாக பேச்சிராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழியாக பேச்சிராஜனை கொலை செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    காவல்துறையின் அலட்சிய போக்காலையே இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாகவும் 2020ல் நடந்த கொலை சம்பவத்திற்கும் பேச்சிராஜனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தச்சநல்லூர் பால் கட்டளை பகுதியில் கலவரம் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Crime News, Murder, Tirunelveli

    அடுத்த செய்தி