Home /News /tirunelveli /

வள்ளியூர் அருகே தனியார் காற்றாலையில் தீ விபத்து.. போராடி தீயை அணைத்த வீரர்கள்

வள்ளியூர் அருகே தனியார் காற்றாலையில் தீ விபத்து.. போராடி தீயை அணைத்த வீரர்கள்

காற்றாலையில் பற்றி எரிந்த தீ

காற்றாலையில் பற்றி எரிந்த தீ

Tirunelveli | வள்ளியூர் அருகே உள்ள கிராமத்தில் இயங்கி வந்த காற்றாலையில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India
    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கோலியான் குளத்தில் தனியார்  நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை இன்று திடீரென தீப்பிடித்தது. மேலும் காற்றாலையின் மேல் பகுதி முழுவதும் எரிந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்தது.

    தற்பொழுது காற்று சீசன் காலம் என்பதால் காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் தென் மாவட்டமான குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவில் காற்றாலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான காற்றாலைகள் போதிய பராமரிப்புகள் செய்யப்படுவதில்லை என கூறப்படுகிறது.

    Also see... இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியதில் தவறில்லை - சீமான் கருத்து

    இதனிடையே போதிய பராமரிப்பு இல்லாத இந்த நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை திடீரென தீப்பற்றி  எரிந்ததில் முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் காற்றாலையின் பேரிங் உடைந்து  மேலிருந்து கீழே விழுந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வள்ளியூர் தீயணைப்புத் துறையினர் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீயிணை அகற்றினர். கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றது.

    செய்தியாளர்: சிவமணி, வள்ளியூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Fire, Thirunelveli

    அடுத்த செய்தி