ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

நெல்லையப்பர் திருக்கோவில் முன்பு கோலாகமாக நடந்த 34 அம்மன் கோயில் சப்பரங்களின் அணிவகுப்பு...

நெல்லையப்பர் திருக்கோவில் முன்பு கோலாகமாக நடந்த 34 அம்மன் கோயில் சப்பரங்களின் அணிவகுப்பு...

விஜயதசமி தசரா திருவிழா

விஜயதசமி தசரா திருவிழா

Tirunelveli | நெல்லையப்பர் காந்திமதியம்பாள் திருக்கோவில் முன்பு 11வது ஆண்டு சக்தி தரிசனம் நடைபெற்றது. அதில் 34 அம்மன் கோயில்களின் சப்பரங்களின் அணிவகுப்பும் நடந்தது. மேளதாளத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடியதோடு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாிசனம் செய்தனர். 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirunelveli, India

  நெல்லை மாவட்டத்தில் விஜயதசமி தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாநகாில் பல்வேறு வீதிகளில் அமைந்துள்ள அம்மன் கோவில்களில் 34 சப்பரங்களின் அணி வகுப்பு  நடைபெற்றது. தென் மாவட்டத்தில் நெல்லையில் நடைபெறும் தசரா திருவிழா சிறப்பானது. குறிப்பாக பாளையங்கோட்டை மற்றும் நெல்லையில் அமைந்துள்ள அனைத்து அம்மன் திருக்கோவில்களில் இருந்தும் அம்மன் சப்பர பவனி புறப்படும்.

  இந்த ஆண்டுக்கான தசரா விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நகரில் உள்ள அனைத்து அம்மன் திருக்கோவில்களிலும் தினமும் சிறப்பு பூஜைகள் அம்மன் அலங்காரம் நடைபெற்றது.  விஜயதசமி தினமான நேற்று நெல்லை மாநகாில் அமைந்துள்ள பிட்டாபுரத்தி அம்மன், துர்க்கை அம்மன், தேவி மாரியம்மன், தேவி ஸ்ரீ சுந்தராட்சி அம்மன்,  முத்தாரம்மன்,  உச்சினிமாகாளி அம்மன்,  முப்பிடாதி அம்மன், வலம்புரி அம்மன், ராஜேசுவரி அம்மன்,  திரிபுரசுந்தரி அம்மன்,  மாரியம்மன், அறம் வளர்த்த நாயகி அம்மன்,  தங்கம்மன், ஸ்ரீ ஆயுள்பிராட்டி அம்மன், நல்லமுத்து அம்மன் என 34 அம்மன் கோவில்களில் இருந்து அம்மன் சப்பர பவனி நெல்லையப்பா் ரத வீதிகளில் வலம் வந்தன.

  பின்னா் அனைத்து அம்மன் சப்பரங்களும் சக்தி தரிசனம் என்று நெல்லையப்பர் கோயில் முன்பு அணி வகுத்து நின்றன. சக்தி தரிசன மேடை முன்பு அனைத்து அம்மனுக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. சப்பரங்கள் இரவில் மின் விளக்குகளில் சிறப்பான அலங்காரங்கள் செய்யப்பட்டு ஜொலித்தன. கொரோனாவிற்கு பின் 2 வருடங்கள் கழித்து சப்பர பவனி வருதால் சப்பரங்களின் அணிவகுப்பில் மேளதாளத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்டு களித்தனர்.

  Also see... திருப்பதி : ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு

  நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் போல ரதவீதிகள் முழுவதும் பக்தர்கள் குவிந்ததால் விடிய விடிய நெல்லை மாநகரம் விழாக்கோலம் கொண்டது. விழா ஏற்பாடுகளை தென் மாவட்ட அனைத்து சமுதாய பூஜாரிகள் சங்கம் செய்திருந்தனர்.

  செய்தியாளர் : ஐயப்பன்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Amman Thayee, Hindu Temple, Nellai