முகப்பு /செய்தி /திருநெல்வேலி / 20 வருடங்களாக குழந்தை இல்லாத ஏக்கம்.. தம்பதி எடுத்த விபரீத முடிவு

20 வருடங்களாக குழந்தை இல்லாத ஏக்கம்.. தம்பதி எடுத்த விபரீத முடிவு

தற்கொலை செய்துகொண்ட ஆறுமுகம்

தற்கொலை செய்துகொண்ட ஆறுமுகம்

திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் மனைவி தற்கொலை போலீசார் விசாரணை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை நகர் பகுதியை ஒட்டிய  சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (45) இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளார்.   இவரது மனைவி ராதிகா (40) இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிறது இவர்களுக்கு குழந்தை இல்லை குழந்தை பேறுக்காக பல்வேறு மருத்துவ உதவியை நாடிய நிலையிலும் அது இவர்களுக்கு கை கொடுக்கவில்லை.  இதனால் இருவரும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளனர்

இந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஆறுமுகம் நேற்று நள்ளிரவில் தங்களது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். கணவர் தூக்கில் தொங்கி இறந்து விட்டதை கண்ட மனைவி விஷகாய்களை மிக்சியில் அரைத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதையும் படிங்க: கணவனை காணலயே.. புயல் வெள்ளத்தில் கண்ணீருடன் தேடிய பெண் - நெகிழ வைக்கும் வீடியோ

இது குறித்து தகவல் அறிந்த சுத்தமல்லி போலீசார் இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

First published:

Tags: Tamil News, Thirunelveli