Home /News /tirunelveli /

கேரளாவுக்கு அதிக கனிமவளங்கள் ஏற்றி சென்ற 10 லாரிகள் பறிமுதல் - போலீசார் தீவிர விசாரணை

கேரளாவுக்கு அதிக கனிமவளங்கள் ஏற்றி சென்ற 10 லாரிகள் பறிமுதல் - போலீசார் தீவிர விசாரணை

லாரிகள்

லாரிகள்

ஒரே நாளில் வள்ளியூர் மற்றும் பணகுடி பகுதியில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் ஏற்றி சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Panagudi | Tirunelveli
    வள்ளியூர் மற்றும் பணகுடி பகுதியில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் ஏற்றி சென்ற 10 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து அதிக அளவில் கேரளாவிற்கு கனிம வளங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கான அனுமதி இருப்பதாக சொல்லப்பட்டாலும் ஒவ்வொரு வாகனத்திலும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு அதிகமாக கனிம வளங்கள் வெட்டி எடுத்துக் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது.

    இதனிடையே நேற்று இரவு வள்ளியூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் யோகேஷ் குமார்  வள்ளியூர் புறவழி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த 5 லாரிகளை மடக்கி சோதனையிட்டபோது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதில் அளவிற்கு கனிம வளங்கள் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது.

    ALSO READ | ’நீண்ட ஆயுளை பெற்று வாழ வேண்டும்...’  மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்! 

    இதனையடுத்து 5 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், லாரி ஓட்டுனர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.மேலும் பணகுடி பகுதியிலும் நடந்த  சோதனையில், அந்த வழியாக அளவிற்கு அதிகமாக பாரம் ஏற்று வந்த 5 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் அதிக அளவில் பாரம் ஏற்றி சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்தின் மகன் தினகரன் லாரியும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Panagudi village, Seized, Tirunelveli

    அடுத்த செய்தி