ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

தூத்துக்குடி செல்பி பாயிண்ட்டில் “தெம்மா தெம்மா” பாடலுக்கு ஆபாச நடனம்.. இளைஞர்களை தேடும் போலீஸ்

தூத்துக்குடி செல்பி பாயிண்ட்டில் “தெம்மா தெம்மா” பாடலுக்கு ஆபாச நடனம்.. இளைஞர்களை தேடும் போலீஸ்

இளைஞர்களின் ஆபாச நடனம்

இளைஞர்களின் ஆபாச நடனம்

Thoothukudi News : தூத்துக்குடியில் "நம்ம தூத்துக்குடி" என்ற வாசக செல்ஃபி பாயிண்ட்டில் தெம்மா தெம்மா பாடலுக்கு ஆபாசமாக நடனமாடி இணையத்தில் பதிவேற்றிய இளைஞர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thoothukkudi, India

  தூத்துக்குடியில் ஜெயராஜ் சாலையில் மாநகராட்சி சார்பில் நம்ம தூத்துக்குடி என்ற வாசகம் அடங்கிய செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நாள்தோறும் ஏராளமானவர்கள் செல்பி எடுத்து செல்வது வழக்கம்.

  இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த செல்பி பாய்ண்ட்டில் சில இளைஞர்கள் ஆபாசமாக “தெம்மா தெம்மா” பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்தனர்.

  இதையடுத்து, அவர்களை போலீசார் பிடித்து மாணவர்கள் என்பதால் போதிய அறிவுரை வழங்கி “செல்பி பாயிண்ட் முன்பு நின்று இனி இதுபோன்று தவறு செய்ய மாட்டேன்” என்ற உறுதிமொழி ஏற்க வைத்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விடுவித்தனர்.

  இதையும் படிங்க : “புதுசா ஒரு மோசடி.. லிங்க க்ளிக் பண்ணா மொத்த பணமும் போய்டும்..” எச்சரிக்கும் தமிழ்நாடு டிஜிபி.!

  இந்த சம்பவம் தூத்துக்குடி மாணவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் வேறு சில மாணவர்கள் மாநகராட்சி செல்பி பாய்ண்டிலும் மாநகராட்சி பூங்காக்களிலும் அரசு சொத்து முன்பு நின்று ஆபாசமாக பாடலுக்கு நடனம் ஆடி இணையத்தில் பதிவேற்றம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

  இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் இந்த வீடியோவை பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்த மாணவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின் இந்த விசாரணை “தெம்மா தெம்மா” பாடலுக்கு ரிலீஸ் வெளியிட்ட மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் : முரளிகணேஷ் - தூத்துக்குடி

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Local News, Thoothukudi