ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

விஜய்யின் வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி - கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

விஜய்யின் வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி - கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

மாதிரி படம்

மாதிரி படம்

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர்.ராஜூ அளித்த சிறப்பு பேட்டியில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகுவதை மறைமுகமாக உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தடுப்பதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

பொங்கல் பண்டிக்கைக்கு தெலுங்கு படங்களுக்கு  மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன் காரண்மாக நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு  படத்தை தெலுங்கில் வெளியிடுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் பல திரைப்பட பிரபலங்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோவில்பட்டியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.ராஜூ  நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில் மெர்சல், விஸ்வரூபம் திரைப்படங்களுக்கு பிரச்னை வந்த போது அதிமுக அரசு திரைத்துரையினருக்கு உறுதுணையாக இருந்து திரைப்படத்தை வெளியிட உதவி செய்ததாக கூறினார்.

அதிமுக ஆட்சியில் திரைத்துரையினர் சுதந்திரமாக செயல்பட்டனர்.ஆனால் இன்றைக்கு ரெட்ஜெயண்ட் பிடியில் திரை உலகம் உள்ளதாகவும், பொங்கலுக்கு வெளியாக உள்ள அஜித் நடித்த துணிவு படத்தினை ரெட்ஜெயண்ட் வெளியிடுகிறது.ஆனால் விஜய் நடித்த வாரிசு படத்தினை வெளியீடும் உரிமை ரெட்ஜெயண்ட்க்கு கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: கடலூர் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார் சவுக்கு சங்கர்

இதனை மனதில் வைத்து கொண்டு இங்கு நேரிடையாக செய்யாமல் ஆந்திராவில் வாரிசு படத்தினை வெளியிட முடியாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர். ஆந்திராவில் வெளியிட முடியாத நிலையில் வாரிசு திரைப்படம் இங்கும் வெளியிட முடியாத நிலை ஏற்படும். இதனால் துணிவு படம் மட்டும் வெளியாகி  அதிகமான லாபத்தை உதயநிதியால் பார்க்க முடியும் என கடம்பூர்.ராஜூ குற்றச்சாட்டியுள்ளார்.

Published by:Arunkumar A
First published:

Tags: Actor Vijay, Kadambur raju, Udhayanidhi Stalin