முகப்பு /செய்தி /தூத்துக்குடி / நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு உதயநிதிதான் தமிழக முதலமைச்சர் - கடம்பூர் ராஜு

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு உதயநிதிதான் தமிழக முதலமைச்சர் - கடம்பூர் ராஜு

கடம்பூர் ராஜு - உதயநிதி ஸ்டாலின்

கடம்பூர் ராஜு - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பார்க்க வேண்டிய நிலைக்கு திமுகவினர் தள்ளப்பட்டுள்ளனர் என கடம்பூர் ராஜு கருத்து.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின்தான் தமிழக முதல்வர் ஆவார் என்றும், திமுக குடும்பத்தில் 9 முதலமைச்சர் இருப்பதாகவும் திமுக அரசினை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்தார்.

சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் 3 கட்டங்களாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் முதல் கட்டமாக பேரூராட்சிகளிலும், 2வது கட்டமாக மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. இன்று 3வது கட்டமாக ஒன்றிய பகுதியில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தலைமையில் திமுக அரசினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க :  ஆக்டர் டூ அமைச்சர்… உதயநிதியின் அரசியல் கிராஃப்! - காத்திருக்கும் சவால்கள்!

இதில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ பேசுகையில், ’அதிமுக ஆட்சியில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு இந்திய அளவில் விருதுகள் பெற்றது. ஆனால் இன்றைக்கு காவல்துறை செயல்படமுடியாத நிலை உள்ளது. திமுக குடும்பத்தில் 9 முதல்வர்கள் உள்ளதுதான் இதற்கு காரணம். ஆகையால் தான் முதல்வர் மு.க.ஸ்டாலினை பொம்மை முதல்வர் என்று நாங்கள் கூறுகிறோம். உதயநிதி ஸ்டாலின், பெரியார், அண்ணா கொள்கையில் வளர்ந்தவர் என்ற நகைச்சுவையுடன் கூறிய கடம்பூர்.செ.ராஜு, அதனால்தான் அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று மக்களுக்காக சொல்லவில்லை, திமுகவினருக்குத் தான் சொல்லி சென்றுள்ளார் என்றார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பார்க்க வேண்டிய நிலைக்கு திமுகவினர் தள்ளப்பட்டுள்ளனர். அண்ணன் உதயநிதி ஸ்டாலின்தான், ராபின்சன் பூங்காவில் அண்ணாவுடன் இணைந்து திமுகவை தொடங்கியவர், பெரியாருக்கு கொள்கைகளை வகுத்து கொடுத்துவர் என விமர்சித்த அவர், திமுக இவ்வளவு கேவலமாக போய்விட்டது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்று உதயநிதிக்கு பட்டாபிஷேக விழா கிடையாது; திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் விழா. அப்பா, மகன், பேரன், கொள்ளு பேரன் என திமுகவில்தான் பதவிக்கு வர முடியும், அதிமுகவில் சாதராண தொண்டன்கூட முதல்வர் பதவிக்கு வரமுடியும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின்தான் தமிழக முதல்வர் ஆவார். ஸ்டாலினால் நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை என்று திமுக பொதுக்குழுவில் அவர் தான் கூறியுள்ளார். தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று இந்தியாவில் சொன்ன ஒரே ஒரு நம்பர் 1 முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்றும் அவர் கூறினார்.

First published:

Tags: CM MK Stalin, Kadambur raju, Udhayanidhi Stalin